மேக் அப் போடுவது சரியா தவறா?

உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் ஸ்க்ரால் செய்யும் போது,  மேக் அப் இல்லாமல் பகிரப்பட்ட சில படங்களிலுள்ள வித்யாசத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
மேக் அப் போடுவது சரியா தவறா?

உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் ஸ்க்ரால் செய்யும்போது,  மேக் அப் இல்லாமல் பகிரப்பட்ட சில படங்களிலுள்ள வித்யாசத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் இந்த "மேக்கப் இல்லாத" தோற்றம் உங்கள் வழக்கமான மேக்கப் தோற்றத்துடன் ஒப்பிடும்போது உங்களின் சருமத்திற்கு அதே அளவில் சேதத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா?

தோல் மருத்துவரும் சோலி ஸ்கின் கிளினிக்கின் நிறுவனருமான டாக்டர் நிருபமா பர்வாண்டா இந்த கேள்விக்கான இரண்டு பதிலைக் கூறுகிறார்.

முதலாவதாக, பெரும்பாலான பெண்கள் மேக் அப் செய்து கொள்வதை விரும்புகிறார்கள். தினமும் முகத்தில் அடிப்படையான மேக் அப்பை செய்து கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேக் அப் போடுவதால் அவர்களின் தன்னம்பிக்கை சிறிய அளவிலாவது அதிகரிக்கிறது, மேலும் அவர்களின் சிறப்பான அம்சங்களை மேம்படுத்த உதவுவது மேக் அப்தான். அலங்காரம் செய்து கொள்வது என்பது பெண்களின் உடன் பிறந்தது’ என்றார் பர்வாண்டா.

மேலும் அவர் கூறுகையில்,  மேக் அப் பற்றிய தவறான புரிதல்கள் இருக்கப் பல காரணங்கள் இருக்கலாம். கனமான மேக்கப்பை தினமும் அதிகப்படியாக பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் மேக் அப்பே போடாதது போலத் தோன்றச் செய்யும்  "நோ-மேக்கப்-மேக்கப் தோற்றம்" உங்கள் சருமத்தை அதே அளவில் சேதப்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

இதற்கான காரணம் மிகவும் அடிப்படையானது, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நீங்கள் மேக் அப்பே போடவில்லை என்று தெரிந்து கொள்வதற்காக நீங்கள் போடும் இந்த மேக் அப் அதே அளவுக்குத் தீங்கானது. இந்த மேக் அப்பின் பல அடுக்குகளைப் பார்க்க முடியாது என்பதால், உங்கள் முகத்தில் மேக்கப் எதுவும் இல்லை என்று அர்த்தமில்லை.

இந்த "ஒப்பனை இல்லாத ஒப்பனைத் தோற்றம்" உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை அழகுக் கலை நிபுணர்கள் உங்களுக்கு உகந்த வகையில் விளக்கியிருப்பார்கள். இந்தத் தோற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், உங்கள் அழகை இயல்பாக மேம்படுத்திக் காட்டுவதன் காரணமாக இருக்கலாம். நான் மேக்கப்பே போடவில்லை, ஆனால் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதை எடுத்துக் காட்டும்விதமாகவும் இத்தகைய மேக் அப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். சுவாரஸ்யமாக, இந்த தோற்றத்தை உலகெங்கிலும் உள்ள பலர் பாராட்டியதற்குக் காரணம், இது உங்கள் தோற்றத்தை பளிச்சென்று மேம்படுத்துவதானால்தான். 

இத்தகைய மேக் அப்பில் உங்கள் தோற்றம் இயல்பானதாகத் தோன்றினாலும், அந்தத் தோற்றத்தை அடைய சருமத்தில் எத்தனை அடுக்குகளை நீங்கள் நிரப்ப வேண்டும் என்பதை மறுக்க முடியாது. இது உங்கள் சருமத்தில் முகப்பரு, சுருக்கம், வறண்ட சருமம், ஒவ்வாமை, கரும்புள்ளிகள் மற்றும் வடுக்கள் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இது வழக்கமான ஒப்பனையிலிருந்து பெரிய மாற்றங்கள் எதையும் தருவது இல்லை என்று பர்வாண்டா சுட்டிக்காட்டுகிறார்.

முன்னதாகக் கேட்கப்பட்ட கேள்வியின் இரண்டாவது பதில், உங்களுடைய தினசரி மேக் அப் பழக்கத்தை விட்டுவிட முடியாவிட்டால், "நோ-மேக்கப்-மேக்கப்" தோற்றம் ஏன் உங்கள் சிறந்ததாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றவேண்டும். அதற்கு உண்மையிலேயே மேக் அப் போடாமல் இருந்துவிடலாம். அல்லது மிகக் குறைந்த அளவில் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட அழகுச் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தலாம்’ என்று அவர் கூறினார்.

குறைவான ரசாயனங்களைக் கொண்டத் தரமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால், "நோ-மேக்கப்-மேக்கப்" என்பதிலுள்ள சரும நன்மைகளைக் உணர்ந்து கொள்வதன் மூலம், அதனையே உங்கள் சருமத்திற்கான வழக்கமான மேக் அப்பாக மாற்றிக் கொள்ளலாம். 

சந்தையில் பல்வேறு தரமான தயாரிப்புகள் தினசரி பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் இத்தகைய தயாரிப்புகளில் உங்கள் சருமம் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது என்றால் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

டீ ட்ரீ, வைட்டமின் சி, ரெட்டினோல் போன்றவற்றைக் கொண்ட மேக் அப் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுங்கள், இதனால் உங்கள் சருமம்  பாதிப்படையாது, மாறாக மெருகேறும் என்று பார்வாண்டா அறிவுறுத்தினார்.

குறிப்பு:  எந்த மேக் அப் போட்டுக் கொண்டு வெளியே சென்றாலும், வீடு திரும்பியதும், உங்கள் மேக் அப்பை முதலில் அகற்றிவிடுங்கள். தினமும் சருமப் பாதுகாப்பு வழிமுறையைப் பின்பற்றுங்கள். அதற்குத் தேவைப்படும் தரமான க்ளென்ஸர், டோனர், மாய்ஸரைஸர் போன்ற அத்யாவசியமான பொருட்களை தினமும் இரவில் பயன்படுத்துங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com