நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டுமா?

நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ விரும்பினால், உணவைக் குறைத்துச் சாப்பிடுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள். 
நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டுமா?

நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ விரும்பினால், உணவைக் குறைத்துச் சாப்பிடுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள். 

'செல்' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வினை அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலியினை வைத்து பரிசோதித்துள்ளனர். 

அதன்படி, கலோரி கட்டுப்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து நீண்ட காலமாக அறியப்பட்டாலும், முதியோர்களிடம் இருந்து நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஆயுட்காலத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த வகையில், சிறுவயது முதலே கலோரி கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது என்று உறுதியாகியுள்ளது.  அதாவது, சிறுவயது முதலே கொழுப்பு குறைவான உணவுகளையே, குறைவான கலோரி கொண்ட உணவுகளை உண்ணுவதன் மூலமாக எதிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்கின்றனர் என தெரிய வந்துள்ளது. 

வயதானவர்களும் அவர்களது உடலுக்கேற்ற கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக அவர்களது ஆயுட்காலம் நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாதாரண உணவு சாப்பிட்ட எலிகள், கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட்ட எலிகள் இரண்டின் ஆயுட்காலம் குறித்து கணக்கிடப்பட்டதில் கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக்கொண்ட எலிகளின் ஆயுட்காலம் அதிகரித்திருந்தது. 

56 எலிகளில் உள்ள 40 செல் வகைகளிலிருந்து மொத்தம் 168,703 செல்களை தனிமைப்படுத்தி ஒற்றை செல் மரபணு-வரிசை முறை தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

எனவே, ஆரோக்கியமான நீண்ட எதிர்காலத்திற்கு கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com