உடல் எடை குறைய, நினைவுத்திறன் அதிகரிக்க அவோகடோ பழம்

உடல் பருமன் உள்ளவர்கள் அவோகடோ பழத்தைச் சாப்பிட்டால் நாளடைவில் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
உடல் எடை குறைய, நினைவுத்திறன் அதிகரிக்க அவோகடோ பழம்

உடல் பருமன் உள்ளவர்கள் அவோகடோ பழத்தைச் சாப்பிட்டால் நாளடைவில் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது என்றும் அதேபோன்று நினைவுத்திறன் அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

'பட்டர் புரூட்' எனப்படும் அவோகடோ பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6, கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை உள்ளன. 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வு சைக்கோபிசியாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ள  வயதானவர்களிடம் தினசரி உணவு குறித்த 12 வார ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. aஆய்வில் கலந்துகொண்ட  84 பேருக்கு  12 வாரம் அவோகடோ பழத்துடன் தினசரி உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்களது செயல்திறன், குறிப்பாக மூளை செயல்பாடு அளவிடப்பட்டது. 

வயதான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வில் வயதானவர்களுக்கே இந்த பழம் அதிக நன்மையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தெரிய வந்துள்ளது. 

வயதான காலத்தில் அதிக எடை அல்லது உடல் பருமன் இருப்பின், அதேபோன்று  முதுமை மறதிக்கும் அவோகடோ பழம் சிறந்த நிவாரணமாக இருக்கும் என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் நைமான் கான் தெரிவித்தார்.

அவோகடோவில் அறிவாற்றலைப் பெருக்கும் உணவுக்கூறுகள் அதிகம் உள்ளது என்றும் இதனால் பணிகளில் கவனக்குறைவு, கவனச் சிதறல் ஆகியவற்றைத் தடுக்கலாம் என்றும் கூறினார். 

அதுமட்டுமின்றி மிகவும் குறுகிய காலத்தில் நினைவுத்திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உடல் எடை குறையவும் இதனை சாப்பிட்டு வரலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com