'அழுவதால் குழந்தைகளின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது'

குழந்தைகள் அழுவது அவர்களின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 
'அழுவதால் குழந்தைகளின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது'

குழந்தைகள் அழுவது அவர்களின் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

குழந்தை உளவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், குழந்தை அழுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

கிட்டத்தட்ட 50 மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு முந்தைய ஆய்வுகள் மட்டுமே குழந்தைகளை அழுவது, அதன் வளர்ச்சியைப் பாதிக்கிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நாங்கள் இங்கிலாந்தில் சமகால பெற்றோரைப் பற்றியும், குழந்தைகள் அழுவதற்கான பல்வேறு அணுகுமுறைகளைப் பற்றியும் ஆய்வு செய்தோம் என்று இங்கிலாந்து வார்விக் பல்கலைக்கழக ஆய்வாளர் அய்டன் பில்ஜின் கூறினார்.

ஆய்விற்காக, 18 மாதங்களுக்கும் மேலாக 178 கைக்குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கண்காணித்தனர். ஒரு குழந்தை அழும்போது, பெற்றோர்கள் உடனடியாக குழந்தை அழுவதை நிறுத்த முயற்சி செய்கிறார்களா? அல்லது அவர்களை சிறிது நேரம் அழ விடுகிறார்களா? என்பது குறித்து மதிப்பீடு செய்தனர். 

இது 18 மாதங்களுக்குள் குழந்தையின் வளர்ச்சியில் சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்று அவர்கள் கண்டறிந்தனர். குழந்தையின் அழுகை மற்றும் அழுகையின் காலம், அதிர்வெண் மற்றும் அழுகை முறை உள்ளிட்டவை வினாத்தாள் மூலம் மதிப்பிடப்பட்டது.

இறுதியாக ஆய்வு முடிவில், குழந்தையின் அழுகை அதன் வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களும் குழந்தை பிறந்தவுடன் சிறிது காலம் குழந்தைகள் அழத் தொடங்கியதுமே அவர்களை சமாதானம் செய்ய முற்படுகின்றனர். அதே நேரத்தில் குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப் பிறகு குழந்தையை அமைதிப்படுத்துவதில் பெற்றோர்கள் தாமதம் காட்டுகின்றனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com