Enable Javscript for better performance
'சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கமாட்டேன்' - திருமணத்தை ஒத்திவைத்தார் துணை ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    'சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கமாட்டேன்' - திருமணத்தை ஒத்திவைத்தார் துணை ஆட்சியர்

    By DIN  |   Published on : 26th March 2020 01:09 PM  |   அ+அ அ-   |  

    EUARTDPUUAA77xK

     

    கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த துணை ஆட்சியர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷீட்டல் பன்சால், அபன்பூரின் ஜனபாத் பஞ்சாயத்து பகுதி துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவரது திருமணம் இன்று(மார்ச் 26) நடப்பதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் இந்தியா முழுவதுமே தீவிரமாகியுள்ள நிலையில், சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இவர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். 

    மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கூறிய அரசின் உத்தரவை ஏற்று திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாகவும், தான் இந்த சமூகத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்று  கூறுகிறார் ஷீட்டல் பன்சால். மேலும், எங்களது பாதுகாப்பு மட்டுமின்றி, அனைவரின் பாதுகாப்புக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, இவரது திருமணத்திற்கான இடம், கேட்டரிங் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் இறுதி நேரத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம்  எடுத்துக்கூறி திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷீட்டல் பன்சாலை திருமணம் செய்துகொள்ளவிருப்பவரும் அரசு அதிகாரி ஆவார். சத்தீஸ்கர் மாநிலத்தில் வன அலுவலராக பணியாற்றி வருகிறார். 

    மேலும், 'அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை அரசு அதிகாரிகளே பின்பற்றாவிட்டால் எப்படி? எங்களது உறவினர்களும் சூழ்நிலையை புரிந்துகொண்ட செயல்படுவது தான் சிறந்தது' என்றார் ஷீட்டல் பன்சால்.

    முன்னதாக, ஷீட்டல் பன்சால் ஜான்பாத் பஞ்சாயத்து கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai