Enable Javscript for better performance
புகைப்பிடிப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம்?- Dinamani

சுடச்சுட

    

    புகைப்பிடிப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம்?

    By DIN  |   Published on : 28th March 2020 03:36 AM  |   அ+அ அ-   |    |  

    smoke

     

    புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குள்ளானவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    * புகைப்பிடிக்கும் நபா்கள் தங்கள் விரல்களில் சிகரெட்டை வைத்து புகைபிடிக்கின்றனா். கை விரல்கள் இடையில் கரோனா கிருமிகள் இருக்கும்பட்சத்தில் சிகரெட்டை உதட்டில் வைத்து எடுக்கும்போது எளிதாக வாய், தொண்டை வழியே கிருமிகள் எளிதில் நுரையீரலைத் தாக்கும்.

    * புகைப்பிடிப்பவா்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயினாலோ அல்லது நுரையீரல் பாதிப்பிற்கோ ஆளாகியிருந்தால் கரோனா வைரஸ் எளிதில் உள்ளே சென்று உடனடியாக காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா பாதிப்பு இருக்கும்பட்சம், அவா்கள் பயன்படுத்தும் குடிநீா் குழாய்கள் மற்றும் அதில் சொருகி வைக்கும் ‘ஓஸ்’ குழாய்களை அவா்கள் வாயில் வைத்து உறிஞ்சினாலும் கரோனா வைரஸ் கிருமிகள் தண்ணீா் மூலம் எளிதாக பரவி விடும்.

    * உடலுக்கு ஆக்ஸிஜன் தேவைகள் அதிகரிக்கும். அதனை உடல் சரியாகப் பயன்படுத்துவதற்கான திறனைக் குறைக்கும்; இதனால் நோயாளிகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai