வாசனைக்கு மட்டுமல்ல; அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக் கீரை!

கீரை வகைகளில் ஒன்றான புதினாவை பெரும்பாலும் நாம் சமையலில் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், புதினாவில் பல அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. 
புதினாக் கீரை
புதினாக் கீரை

கீரை வகைகளில் ஒன்றான புதினாவை பெரும்பாலும் நாம் சமையலில் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், புதினாவில் பல அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. 

► புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து,  இரும்புச் சத்து பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன. 

► பொதுவாகவே உணவுகளில் அல்லது பழச்சாறுகளில் சிறிதளவு புதினாவை சேர்த்து கொண்டால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும், முக்கியமாக வயிற்று பொருமல் சரியாகிவிடும். 

► உணவுகளில் எந்த விதத்தில் பயன்படுத்தினாலும் அதன் பலன் மாறாது என்பது புதினாவில் குறிப்பிடத்தக்க ஒன்று. 

► பிரியாணிகளில் புதினாவை சேர்ப்பது உண்மையில் வாசனைக்காக அல்ல. அசைவ உணவு மற்றும் கொழுப்புப்பொருள்களை இது எளிதில் ஜீரணமாக்கும்.

► புதினாவை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் இரத்தம் சுத்தமாகும். பசியைத் தூண்டும். மலச்சிக்கல் தீரும். 

► பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னை தீரவும், ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை நீக்கவும் பயன்படுகிறது. 

► அனைத்து விதமாக வயிற்றுக் கோளாறுகளை நீக்க பயன்படுகிறது. 

► அதேபோன்று தலைவலி, உடம்பில் எங்கேனும் வலி இருந்தால் அவ்விடத்தில் புதினாவை அரைத்து பற்றுப் போட்டால் வலி மறைந்துவிடும். 

► வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், வாந்தி, குமட்டல், ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் உணவாக புதினா இருக்கிறது. 

► இதுதவிர மஞ்சள் காமாலை, வாதம், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

► முகத்தில் புதினா சாறை தடவி வருவதன் மூலம் முகப்பரு மறையும். வறண்ட சருமம் நீங்கும். 

► அதேபோன்று டீ அல்லது பழச்சாறில் புதினா இலை அல்லது புதினா பொடியை சேர்த்து குடித்து வர உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் புதினா முக்கியமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com