'சுயநலத்துடன் இருப்பது பணியிடத்தில் வளர்ச்சிக்கு உதவாது'

சுயநலத்துடன் இருப்பது பணியிடத்தில் உயர்பதவிகளை அடைய உதவாது என மனித ஆளுமைப் பண்புகள் குறித்த கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சுயநலத்துடன் இருப்பது பணியிடத்தில் உயர்பதவிகளை அடைய உதவாது என மனித குணநலன்கள்/ஆளுமைப் பண்புகள் குறித்த கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது. 

வேலை செய்யும் இடத்தில் நம்பகமானவர்களாக, உதவும் தன்மை கொண்டவராக இருப்பவர்கள், எதிர்காலத்தில் உயர் பதவிகளை அடைவார்கள். ஆனால், சுயநல, நயவஞ்சக எண்ணத்துடன் இருப்பவர்கள் ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதில்லை, அவர்கள் உயர்பதவியை அடைய வாய்ப்பில்லை என்று தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளம் வயதினரின் பள்ளி, கல்லூரி பருவத்தில் இருந்து பணிக்காலம் வரை சுமார் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கலிபோர்னியாயா பெர்க்கலே பல்கலைக்கழக பேராசிரியர் கேமரூன் ஆண்டர்சன், உளவியல் பேராசிரியர் ஆலிவர் பி. ஜான், முனைவர் டாரன் எல். ஷார்ப்ஸ் மற்றும் அசோக் ஆகியோருடன் கோல்பி கல்லூரி பேராசிரியர் கிறிஸ்டோபர் ஜே. சோட்டோ இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் 443 பேர் பங்கேற்றனர். 

மூன்று பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படித்த மாணவர்களின் பள்ளி, கல்லூரி பருவம், பணியிடத்தில் அவர்களின் மதிப்பு, திறமை, குண நலன்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் சுயநலத்துடன், நயவஞ்சக குணத்துடன் இருந்தவர்கள் பிற்காலத்தில் பணியில் உயர் பதவியை அடையவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவ்வாறு அவர்கள் உயர் பதவியை அடைந்தாலும் அதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் அதிகமாக இருந்தது. 

'ஒருவரை தனது அதிகாரத்தால் வென்றுவிட முடியும் என்றால் அந்த முட்டாள்தனம் அவரது வளர்ச்சிக்கு உதவாது. அவ்வாறு அதிகாரத்தால் ஒருவரை சிறுமைப்படுத்துவது, மற்றவர்கள் மத்தியில் அவரது குணநலனை மோசமாக சித்தரிக்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக இருப்பவர்கள் தங்களது நேர்மை மற்றும் பொதுநலத்தால் வாழ்க்கையில் எளிதில் முன்னேறுகின்றனர். 

அதேபோன்று நிறுவனங்களைப் பொறுத்தவரையிலும், அதிகாரப் பதவிகளில் உள்ளவர்கள் மோசமானவராக, சுயநலத்திற்கு முன்னுரிமை கொடுப்பவராக, ஊழல், லஞ்சம் பெறுபவராக இருந்தால் அந்த நிறுவனமும் வளர்ச்சியில் குறைவாக இருக்கிறது' என ஆய்வாளர்களில் ஒருவரான ஆண்டர்சன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com