இளமையிலே முகச்சுருக்கமா?

தற்போதைய உணவு முறைகள், செயற்கை அழகுப் பொருள்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப பெண்கள் பலருக்கு இளம் வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தற்போதைய உணவு முறைகள், செயற்கை அழகுப் பொருள்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப பெண்கள் பலருக்கு இளம் வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்படுகிறது. இதற்கும் அழகு நிலையங்களை நாடாமல், இயற்கையாகவே வெகு விரைவில் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே தீர்வு காண முடியும். 

► சாதாரணமாக உணவில் கேரட், முட்டைகோஸ், தக்காளி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் முகச்சுருக்கம் வராது.

► பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்கள், திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பழச்சாறு, இளநீர் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

► முகச்சுருக்கம் வந்தபின்னரோ அல்லது முகச்சுருக்கம் வரமால் தடுக்கவோ உங்கள் தோல் தன்மைக்கு ஏற்றவாறு கீழ்க்கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம். முகம் பொலிவு பெற, முகத்தில் கருமை மறையவும் இதனை பின்பற்றலாம். 

► பப்பாளி, தக்காளி ஆகியவற்றை மசித்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதேபோன்று வாழைப்பழம், கேரட் சாறு ஆகியவற்றையும் முகத்தில் தடவலாம். 

► தேன் அல்லது பாலுடன் சிறு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். 

► ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சிறிதளவு கடலைமாவு, மஞ்சள் தூள், கேரட் சாறு கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்திருக்கலாம். 

► வாரத்தில் இருமுறை முகத்தில் கிளிசரின் தடவலாம். அல்லது பசும்பாலுடன் இதனை கலந்து இரவு படுக்கச் செல்லும்முன் முகத்தில் மசாஜ் செய்யலாம்.

► இரவில் ஆலிவ் எண்ணெய் அல்லது கிளிசரினை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்து பயத்தம் மாவு, கடலை மாவு, மஞ்சள் கலவையை முகத்தில் தடவி பின்னர் கழுவலாம். இதனால் முகத்தில் பொலிவு கூடும். 

► அதேபோன்று முட்டையின் வெள்ளைக்கருவுடன் பயத்தம் மாவு, கடலை மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து முகப்பொலிவுக்கு பயன்படுத்தலாம். 

► பன்னீர், ரோஸ் வாட்டரையும் முகச்சுருக்கம் தவிர்க்க பயன்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com