ஸ்மார்ட்போனில் கேமராவைவிட ஆடியோ தரத்தை விரும்பும் இந்தியர்கள்! காரணம்?

ஸ்மார்ட்போன்களில் கேமராவை விட ஆடியோ தரத்தையே இந்தியர்கள் விரும்புவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்மார்ட்போன்களில் கேமராவை விட ஆடியோ தரத்தையே இந்தியர்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப புதிய நவீன அம்சங்களை ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தி வருகின்றன. 

பொதுவாக ஸ்மார்ட்போனில் கேமரா, ஓ.எஸ், பேட்டரி திறன், ஸ்டோரேஜ் அளவு ஆகியவை முக்கியமாக பார்க்கப்படும். ஆனால், இந்தியர்கள் பெரும்பாலானோர் கேமரா, பேட்டரி திறனை விட ஆடியோ தரத்தையே அதிகம் விரும்புகின்றனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் ஆடியோ தரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த மாற்றம் சமீபமாகவே நிகழ்ந்துள்ளதாகவும், இதற்கு ஆன்லைன் ஓடிடி தளங்கள் முக்கிய காரணமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், திரையரங்குகளுக்கு செல்ல முடியாத இந்த சூழ்நிலையில், திரைப்படம் பார்க்கவும், பாடல்கள் கேட்கவும் பயனர்கள் ஓடிடி தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்) மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியர்கள் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது 66% முக்கியத்துவத்தை ஆடியோ தரத்துக்கு அளிக்கின்றனர். இதுவே பேட்டரி திறனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் 61% ஆகவும், கேமராவுக்கு 60% ஆகவும் உள்ளது.

ஸ்மார்ட்போனின் பயன்பாட்டில் 94% ஓடிடி இயங்குதளங்களில் பாடல்கள் கேட்பது, திரைப்படங்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று ஆன்லைன் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் சிறந்த ஒலி இருக்க வேண்டும் என்று பயனர்கள் விரும்புகின்றனர்

இதில், ''டிஜிட்டல் நேட்டிவ்ஸ்' எனும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவோர் வாரந்தோறும் 20 மணி நேரத்திற்கும் மேலாகவும்(39%)  'டிஜிட்டல் டிபெண்டண்ட்ஸ்' எனும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்துள்ளவர்கள் வாரந்தோறும் 10-20 மணிநேரம் (44%) 'டிஜிட்டல் லாகார்ட்ஸ்' எனும் குறைவாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் குறைவாகவும் (17%) ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர். 

அதேபோன்று 78% பேர் வயர்டு ஹெட்போன்களையும், 65% பேர் வயர்லெஸ் ஹெட்போன்களையும் பய்னபடுத்துகின்றனர். 

பயனர்களில் 8ல் 5 பேர் (62%) கேமிங்கின் போது ஆடியோவைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களில் 72% பேர் ஆடியோ தரத்தில் திருப்தி அடைந்துள்ளனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com