சாலையில் மேடு-பள்ளம் வந்தால் வாகன ஓட்டியை எச்சரிக்கும் செயலி

சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வரும் பள்ளத்தில் நிலைகுலைந்துப் போகும் வாகன ஓட்டிகள் பலருக்கும் இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை தரலாம்.
சாலையில் இருக்கும் மேடு-பள்ளங்களைச் சொல்லும் செயலி
சாலையில் இருக்கும் மேடு-பள்ளங்களைச் சொல்லும் செயலி


கொச்சி: சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வரும் பள்ளத்தில் நிலைகுலைந்துப் போகும் வாகன ஓட்டிகள் பலருக்கும் இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை தரலாம்.

சாலையில் இருக்கும் மேடு பள்ளங்களை முன்கூட்டியே வாகன ஓட்டிகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களது முதுகெலும்பையும் வாகனத்தின் ஆயுளையும் சற்று அதிகரிக்க உதவுகிறது இந்த செயலி.

இன்டென்ட்ஸ் கோ (Intents Go) என்ற செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் செல்லும் பாதையின் சாலை வரைபடத்தை மையமாக வைத்து இந்த செயலி செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குருகிராமில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டென்ட்ஸ் மோபி நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த செயலியில், ஒரு பள்ளத்தின் தோராய அளவைக் கணக்கிட்டு, வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சாலை விபத்துகளில் மட்டும் 400 பேர் உயிரிழக்கிறார்கள். இதனை பூஜ்யமாக்கும் நோக்கத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருக்கும் சாலைகளையும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்தோடு இது உருவாக்கப்பட்டிருப்பதாக இன்டென்ட்ஸ் மோபியின் நிறுவனர் தப்ரெஸ் ஆலம் கூறுகிறார்.

இந்த செயலி, பள்ளங்கள் மட்டுமல்ல, தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களையும் கூட முன்கூட்டியே எச்சரிக்கும்.  தற்போது இதன் பீட்டா வெர்ஷன் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. மேம்படுத்தப்பட்டு இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

இதில் காணப்படும் சிறப்புகள்.. 
தற்போதைய சாலை நிலவரம்.
தனிநபரின் எந்த தகவலும் கோரப்படாது.
வாய் மொழியாக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.
பள்ளம் மற்றும் வேகத் தடைகளை முன்கூட்டியே எச்சரிக்கும்
உணவகங்கள், கழிப்பறை, வாகன பழுதுநீக்குவோரையும் தேடலாம்.
தண்ணீர் தேங்குவது, விபத்து, போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களையும் அளிக்கிறது.

ஆனால், பள்ளாங்குழிகளாகக் காணப்படும் சாலையில் செல்லும் போது, இந்த செயலி கொடுக்கும் முன்னெச்சரிக்கையால், வாகன ஓட்டிக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் அதற்கு நிச்சயம் இந்த செயலியின் நிர்வாகம் பொறுப்பாகாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com