கறுப்பின பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவது குறைவு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கறுப்பின பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது குறைவு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கறுப்பின பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது குறைவு என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின்(ஏசிஎஸ்) மதிப்பாய்வு செய்யப்பட்ட புற்றுநோய் தொடர்பான ஆன்லைன் தளத்தில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மார்பகப் புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் குறித்த பல்வேறு தரவுகள் இருந்தபோதிலும், வெள்ளை நிற பெண்களை விட கறுப்பு நிற பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் இறக்கின்றனர் என்றும் அவர்கள் சரியான நேரத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்றும் இந்த ஆய்வில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, ஏற்றத்தாழ்வு தான் காரணம் என்பதும் இங்கு முன்வைக்கப்படுகிறது. 

வட கரோலினா பல்கலைக்கழகத்தின் மெலிசா ஏ. ட்ரூஸ்டர் தலைமையிலான குழு பெண்களின் சிகிச்சையின் நேரம் மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து ஆய்வு செய்ததில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.

ஆய்வில், நிலை I-III மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை நிற பெண்கள் 2,841 பேர் பங்கேற்றனர். சிகிச்சை தொடங்குவதற்கான ஒட்டுமொத்த சராசரி நேரம் 34 நாட்கள். அதிகமான கறுப்பின பெண்கள் தாமதமாக சிகிச்சை (13.4%) எடுத்துகொண்டனர். அதேநேரத்தில் வெள்ளை நிற பெண்கள் 7.9% என்ற தாமத அளவு இருந்தது. இதனால் கறுப்பின பெண்கள் நீண்டகாலம் சிகிச்சை பெறுகின்றனர். 

அதேபோன்று சிகிச்சை பெறுவோரில் கறுப்பின பெண்களில் வயதானவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் தாமதமாக புற்றுநோய் இருப்பதை கண்டறிந்து சிகிச்சை எடுப்பவர்களாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

உயர் சமூக பொருளாதார அந்தஸ்துள்ள பெண்களில், 11.7% கறுப்பின பெண்கள் சிகிச்சையைத் தொடங்குவதில் தாமதித்தனர். இதுவே, வெள்ளை நிற பெண்களின் விகிதம் 6.7% ஆக இருந்தது. குறைந்த சமூக பொருளாதார அந்தஸ்துள்ள பெண்களிடமும் இந்த நிலையே இருந்தது. 

இது தனித்துவமான தடைகளை அனுபவிப்பதாகத் தோன்றும் கறுப்பின பெண்களின் மாறுபட்ட அனுபவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக முன்னணி எழுத்தாளர் மார்க் எமர்சன் இதுகுறித்து கூறுகிறார். 

தாமதத்திற்கான காரணங்கள் சிக்கலானவை என்றும் இதனை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com