சமூக ஊடகங்கள் 'அடிமையாதல்' பழக்கத்தை ஏற்படுத்துகிறதா?

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும்போதுதான் அடிமையாதல் பழக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
சமூக ஊடகங்கள் 'அடிமையாதல்' பழக்கத்தை ஏற்படுத்துகிறதா?

சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தும்போதுதான் அடிமையாதல் பழக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்ட்ராத்க்ளைடு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்தும் 100 பேரிடம் அவர்களது பழக்கவழக்கங்கள், குணாதியசங்களில் மாற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக சமூக ஊடங்களைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களின் கவனம் செலுத்தும் திறனும் சோதிக்கப்பட்டது. 

இதில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் யாருக்கும் கவனச்சிதறல் ஏற்படவில்லை என்றும் அவசியத்திற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது அடிமையாதலில் வராது என்றும் கூறியுள்ளனர். 

'சமூக ஊடகங்கள் பயன்பாடு சமூகத்தில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் 380 கோடி பேர் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை சமூகத் தொடர்பு மற்றும் நல்வாழ்வுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், சமூக ஊடகங்களை தொடர்ந்து தேவையின்றி அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போதுதான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிகம் பயன்படுத்தும்போதுதான் அடிமையாதல் பழக்கம் ஏற்படுகிறது. 

இளைஞர்கள் சமூக ஊடகங்களைத் தாண்டி மற்ற விஷயத்திலும் கவனம் செலுத்துகின்றனர், சமூக ஊடகங்களால் மட்டும் அவர்கள் ஈர்க்கப்படுவதில்லை, சமூக வலைதள செயலிகளும் சில நேரங்களில் அவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.

எனினும் சமூக ஊடகத்தின் அதிக பயன்பாட்டினால் அடிமையாதல் பழக்கம் ஏற்படுகிறதா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எங்களது முதற்கட்ட ஆய்வில் சமூக ஊடகங்கள் பயன்பாடு நேர்மறையாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே சமூகவலைத்தள பயன்பாட்டை போதைப்பொருள், ஆல்கஹால் உள்ளிட்டவற்றுக்கு அடிமையாதலுடன் ஒப்பிட வேண்டாம்' என்று ஆய்வாளர் டாக்டர் டேவிட் ராபர்ட்சன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com