'தனிமைக்குத் துணையாகும் இசை' - உலக இசை நாள் இன்று!

நம்மில் பெரும்பாலானோருக்கு இசையால் கிடைக்கும் பலன் என்னவென்று தெரியும். எந்தவொரு உணர்ச்சியைக் கையாளவும் எந்த ஒரு மனநிலையையும் அமைதிப்படுத்தவும் இசை உதவும். 
'தனிமைக்குத் துணையாகும் இசை' - உலக இசை நாள் இன்று!

இசையால் வசமாகா இதயம் எது?

நம்மில் பெரும்பாலானோருக்கு இசையால் கிடைக்கும் பலன் என்னவென்று தெரியும். இருந்த இடத்தில் இருந்தே நீண்ட தூரம் பயணிக்கச் செய்யும் இசை பல நேரங்களில் நம்மை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது.

எந்தவொரு உணர்ச்சியைக் கையாளவும் எந்த ஒரு மனநிலையையும் அமைதிப்படுத்தவும் இசை உதவும். 

இதற்குக் காரணம் இசையைக் கேட்கும்போது உணர்ச்சிகளைக் கையாளும் மூளையின் லிம்பிக் அமைப்பு செயல்படுகிறது. மேலும், இசை கேட்கும்போது மூளையின் ஆக்ஸிடைஸின் ஹார்மோன் அதிகமாகத் தூண்டப்படுகிறது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சி, தாராள மனப்பான்மை, நம்பகத் தன்மை ஆகியவற்றை அதிகரிக்கிறது.  

உதாரணமாக ஒரு பாடலைக் கேட்கும்போது ஏக்கமும், ஒரு பாடலைக் கேட்கும்போது அழுகையும், ஒரு பாடலைக் கேட்கும்போது சந்தோஷமும் என மாறிமாறி நிகழ்வது இதனால் தான். 

இன்று மருத்துவமனையில் கூட பலரது சிகிச்சைக்கு இசை பயன்படுகிறது. ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இசை உதவுகிறது. தீவிர மனநோய்களுக்கு இசை சிகிச்சைகள் பெரிதும் பயன்படுகின்றன.  'அல்ஸைமர்' எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு 'இசை சிகிச்சை' நல்ல பலனைத் தருகிறது. 

இசையை கற்றுக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று இசைக் கலைஞர்கள் கூறுகின்றனர். பிராணயாமா, தியானம் ஆகியவற்றை இசையில் உணர முடியும். இவற்றால் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர்

சிறப்புக் குழந்தைகள் பலரும் இசையால் கல்வியை கற்றுக்கொள்கின்றனர். மேலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் இசையை எளிதாகக் கற்றுக்கொள்கின்றனர். 

இசை மூலமாக ஒரு பொருள் உள்வாங்கப்படும்போது அது மூளையில் எளிதாகப் பதிவதுடன் நினைவில் இருந்து நீங்காமல் உள்ளது. 

இசையின் மீது பிரியமில்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தவும், துக்கமான தருணங்களை சமாளிக்கவும் இசை தான் பெரிய கருவியாக இருக்கிறது. 

அதிலும் துக்கத்தில், தனிமையில் உள்ளவர்களுக்கு இசை தான் பெறிய ஆறுதல். தனிமையில் இருக்கும் பலருக்கும் உறுதுணையாக பக்கபலமாக இருக்கிறது. 

தங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள் பலர். ஏனெனில் மனதின் நச்சு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு இருப்பதாக ஆய்வுகள்கூட உறுதி செய்துள்ளன. 

அதுபோல இசையைக் கேட்பது மனிதனில் 13 வகையான உணர்ச்சிகளைத் தூண்டுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இசையைக் கேட்பதாலோ  இசையைக் கற்றுக்கொள்வதாலோ ஏற்படும் பயன்கள் பல. 

♦ மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. 

♦ நினைவுத்திறனை அதிகரிக்கும்; கவனத்தை ஒழுங்குபடுத்தும்.

♦ சுயமரியாதையை, தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

♦ படைப்பாற்றல், தகவல் தொடர்பு திறன் மேம்படும். 

♦ நேர்மறையான சிந்தனை, நம்பிக்கை அதிகரிக்கும்.

♦ மன அழுத்தம், மனச்சோர்வு நீங்கும். 

♦ சூழ்நிலையை சாதகமாக மாற்றும். 

♦ பயம், பதட்டத்தைப் போக்கும்.

♦ கற்றலை எளிமைப்படுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com