'பெண்களின் மனநிலையை மேம்படுத்தும் டயட், உடற்பயிற்சி'

ஆண்களைவிட பெண்களின் மனநிலை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் அதிகம் தொடர்புடையது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
'பெண்களின் மனநிலையை மேம்படுத்தும் டயட், உடற்பயிற்சி'

ஆண்களைவிட பெண்களின் மனநிலை உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் அதிகம் தொடர்புடையது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதைய காலகட்டத்தில் உணவு பழக்கவழக்க முறைகள் மாறுபட்டுள்ளதால் இருபாலரும் உடற்பருமன் பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிலும் பெண்கள் பலரும் உடல் எடை அதிகரித்து வருவதாக உடற்பயிற்சி செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். உடற்பயிற்சி கூடங்களில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் உடல் எடையைக் குறைக்க, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்கின்றனர். 

இந்நிலையில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்து நியூயார்க் பிங்காம்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் ஆண்களைவிட பெண்களின் மனநிலை டயட், உடற்பயிற்சி ஆகியவற்றுடன் அதிகம் தொடர்புடையது என தெரிய வந்துள்ளது. 

பொதுவாக உடற்பயிற்சி செய்வது, சத்தான உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வது உள்ளிட்டவை ஒருவரின் மனநிலையை மேம்படுத்துகிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் மனநிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 

அந்தவகையில் இந்த ஆய்வின் பெண்களின் மனநிலையை நிர்ணயிக்கும் காரணிகளாக உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் அமைந்துள்ளன. மனநலனுக்கும் மேற்குறிப்பிட்ட காரணிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 

மேலும் ஆரோக்கியமற்ற துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த உணவுகளை உண்டால் ஆண்களைவிட பெண்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவை சாப்பிடும்போது பெண்களின் மனநிலை நன்றாகவும், துரித உணவுகளை, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும்போது மனநிலை சோர்வாகவும் உள்ளது ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இது பெண்களின் மனநிலைக்கும் உடல்நிலைக்குமான தொடர்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த ஆய்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com