பெண்களுக்கான 'பம்பிள்' டேட்டிங் செயலியில் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்

ஆன்லைன் டிஜிட்டல் தளத்தில் பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடவும் பிரபல டேட்டிங் செயலியான பம்பிள் பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 
பெண்களுக்கான 'பம்பிள்' டேட்டிங் செயலியில் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்

ஆன்லைன் டிஜிட்டல் தளத்தில் பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடவும் பிரபல டேட்டிங் செயலியான பம்பிள் பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முன்னதாக டிஜிட்டல் தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் குறித்த கணக்கெடுப்பில், இந்தியாவில் 83% பெண்கள் ஆன்லைனில் ஏதேனும் ஒருவகையில் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்றும் 3 ல் 1 பெண் வாரந்தோறும் இதனை எதிர்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  

மேலும் 2020 ஆம் ஆண்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு இணைய அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்று 70% பெண்கள் நம்புகின்றனர். கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (59%) தாங்கள் பாதுகாப்பற்றவர்களாகவும், பாதிக்கும் குறைவானவர்கள் (48%) கோபப்படுவதாகவும் தெரிவித்தனர்.

உலகில் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் டேட்டிங் செயலி 'பம்பிள்' ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டு விட்னி என்ற பெண்ணால் உருவாக்கப்பட்டது. தற்போது 31 ஆகும் இவர் அமெரிக்காவின் பில்லியனர். அமெரிக்காவில் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றதை அடுத்து இந்தியாவில் தொடங்கினார். 

இந்நிலையில் இந்த நிறுவனம் பெண்களின் பாதுகாப்பிற்காக தங்களது செயலியில் பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஸ்டேன்ட் ஃபார் சேஃப்டி' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு வழிமுறைகளை சேஃப்சிட்டியுடன் கூட்டாக வெளியிடுகிறது. 

இதன்படி, பெண்கள் இந்த செயலியில் ஏதேனும் அசௌகரியமாக உணர்ந்தால் புகார் தெரிவிக்கலாம். செயலியைப் பயன்படுத்தும் யாரேனும் ஒருவரின் நடத்தை உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ செயலி வழியாக புகார் தெரிவிக்கலாம். 

மேலும், மார்பிங் செய்யப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் அல்லது செய்திகள் பகிரப்பட்டாலோ அவை மங்கலாக மறைக்கப்படும். புகைப்படங்களை சரிபார்க்கும் அம்சம் உள்ளது. ஆபாசப் படங்கள் மங்கலான படங்களாகச் சென்றடையும். அவ்வாறான புகைப்படங்கள் மற்றும் அனுப்பிய நபர்கள் மீது பெண்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எங்கள் தளத்தின் மூலமாக சமூகத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என பம்பிள் நிறுவன மூத்த அதிகாரி வி.பி. ப்ரிதி ஜோஷி கருத்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com