உடற்பயிற்சிக்கு முன்னதாக ஒரு கப் காஃபி அருந்துவதால்....

காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக ஒரு கப் காஃபி அருந்துவதால்  கொழுப்புகள் எளிதாக கரைந்து உடல் எடை குறையும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 
உடற்பயிற்சிக்கு முன்னதாக ஒரு கப் காஃபி அருந்துவதால்....

காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக ஒரு கப் காஃபி அருந்துவதால்  கொழுப்புகள் எளிதாக கரைந்து உடல் எடை குறையும் என்று கூறுகிறது ஓர் ஆய்வு. 

சமீபமாக காஃபி பிரியர்களுக்கு ஆதரவாகவே அதுகுறித்த பல்வேறு ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் 'காஃபி அதிகம் குடிப்பது நல்லதல்ல' என்ற பொதுவான கருத்து பொய்யாகி வருகிறது.

தூக்கமின்மை, படபடப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவோர் மட்டும்  காஃபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், இந்த ஆய்வின் மூலமாக காஃபி பிரியர்கள், உங்கள் காஃபி பயணத்தைத் தாராளமாகத் தொடரலாம். 

குறிப்பாக தற்போது உடல் எடையை குறைக்க பலரும் முயற்சித்து வரும் நிலையில், காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சிக்கு முன்னதாக ஒரு கப் காஃபி அருந்திவிட்டு உடற்பயிற்சி செய்தால் உடல் கொழுப்புகள் எளிதாக கரைய வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கிரானடா பல்கலைக்கழகத்தின் உடலியல் துறை விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் சர்வதேச விளையாட்டு ஊட்டச்சத்து சங்க இதழில்(Journal of the International Society of Sports Nutrition) வெளியிடப்பட்டுள்ளது. 

உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு  எடுத்துக்கொள்ளும் காஃபி கொழுப்புகளை எரிக்க உதவுகிறது, இதனை பிற்பகலில் செய்தால் கொழுப்புகள் கரையும் விகிதம் அதிகரிக்கிறது, இதனால் உடல் எடை வேகமாகக் குறையும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, காஃபி குடிப்பது உடல்நலத்தை மேம்படுத்தி ஆயுளை அதிகரிக்கச் செய்யும், இதயச் செயலிழப்பு ஏற்படுவது குறைவு, ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவு, காஃபியில் உள்ள காஃபின் எனும் பொருள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது, மன அழுத்தத்தைக் குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com