முகம் 'பளிச்'சென்று ஆக வேண்டுமா?

சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன.  இவ்வகையான இயற்கை முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் தொடர்ந்து பயன்படுத்தலாம். 
முகம் 'பளிச்'சென்று ஆக வேண்டுமா?

சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன.  இவ்வகையான இயற்கை முறைகள் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் தொடர்ந்து பயன்படுத்தலாம். 

அந்தவகையில் சருமத்தைப் பாதுகாக்க 'பச்சைப்பயறு மாவு' அவசியமான பொருள். பிரபலங்கள் கூட அழகுக்காக இதனைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். முற்காலத்திலும் பெண்கள் அழகுக்காக இவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். 

எப்படி பயன்படுத்துவது? 

♦குளிக்கும்போது பச்சைப்பயறு மாவை அப்படியே முகத்திற்குப் பயன்படுத்தலாம். 

♦அல்லது குளிப்பதற்கு முன்னதாக, முகத்தை நன்றாக கழுவிவிட்டு மாவுடன் சிறிது தயிர், சிறிது மஞ்சள் தூள் கலந்து 'மாஸ்க்' போடலாம். 

♦ பச்சைப்பயறு மாவுடன் ரோஸ் வாட்டர் கலந்தும் பேஸ் மாஸ்க் போடலாம். 

பயன்கள் 

♦ சருமம் பொலிவு பெறும். சருமத்தின் நிறம் கூடும்.

♦ முகப்பருக்கள், அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். 

♦ சிலருக்கு முழங்கை, கழுத்து, அக்குள் பகுதிகளில் கருமையாக இருக்கும். உடலில் கருமையாக இருக்கும் இடத்தில் பச்சைப் பயறு மாவைப் பயன்படுத்தினால் கருமை மறையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com