'ஆல்கஹால் அல்லாத பீர்' - விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

'பீர்' என்ற மதுபானம் அருந்துவது இன்று ஆண்கள், பெண்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. நவீன கலாசாரத்தில் ஒன்றாகவும் மாறி வருகிறது. 
'ஆல்கஹால் அல்லாத பீர்' - விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!

'பீர்' என்ற மதுபானம் அருந்துவது இன்று ஆண்கள், பெண்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. நவீன கலாசாரத்தில் ஒன்றாகவும் மாறி வருகிறது. 

வழக்கமான பீரில் சிறிதளவு ஆல்கஹால் இருக்கும். இதனால் ஆல்கஹால் பிடிக்காதவர்கள் இத்தகைய பீரை அருந்துவதில்லை. இந்நிலையில், ஆல்கஹால் இல்லாத ஒரு பீரை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

​​​​வழக்கமான பீர் சுவையுடன் ஆல்கஹால் அல்லாத பீர் காய்ச்சுவதற்கான வழியை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இரண்டின் சுவையும் ஒன்றாக இருக்கும். 

ஆல்கஹால் உள்ள பீரைப் போன்றே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆல்கஹால் இல்லாத பீரும் உள்ளதாகத் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் பயோடெக்னாலஜி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதும் ஆல்கஹால் அல்லாத பீர்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் சுவை மாறுபடும். எனவே, அதே சுவையுடன் கூட ஆல்கஹால் அல்லாத பீர் மக்களைக் கவரும் என்று கருதப்படுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் டென்மார்க் மற்றும் ஐரோப்பாவில் ஆல்கஹால் அல்லாத பீர் விற்பனை கணிசமாக உயர்ந்திருந்தாலும், அதன் சுவை பிடிக்கவில்லை என்று பலர் தெரிவித்துள்ளனர். 

அந்த சுவைக்கு ஆல்கஹாலுக்கு பதிலாக மோனோடெர்பெனாய்டுகள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான வழியைத்தான் ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இதன் மூலமாகவே இதன் சுவை, ஆல்கஹால் பீரை ஒத்திருக்கும். 

இந்த நறுமண மூலக்கூறுகள், ஈஸ்டில் இருந்து வெளியாகும்போது, ​​அவற்றைச் சேகரித்து பீரில் வைக்கும்போது அந்த சுவை கிடைக்கிறது. உண்மையான ஆல்கஹாலுக்குப் பதிலாக இந்த மூலக்கூறுகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் இல்லாத பீரைத் தயாரிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

மேலும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆல்கஹால் அல்லாத பீரின் சுவையை மேம்படுத்துவதற்கு, தற்போதுள்ள நுட்பங்களைவிட இந்த முறை மிகவும் நிலையானது என்றும் கூறியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com