கரோனா தடுப்பூசி மனநலனையும் மேம்படுத்துகிறதா? - ஆய்வு சொல்வது என்ன?

கரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்வது மட்டுமின்றி மனநலனையும் மேம்படுத்தும் ஆற்றல் கரோனா தடுப்பூசிக்கு இருப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 
கரோனா தடுப்பூசி மனநலனையும் மேம்படுத்துகிறதா? - ஆய்வு சொல்வது என்ன?

கரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்வது மட்டுமின்றி மனநலனையும் மேம்படுத்தும் ஆற்றல் கரோனா தடுப்பூசிக்கு இருப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

கரோனா எனும் பெருந்தொற்று கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பினாலும் கட்டுப்பாட்டு விதிமுறைகளாலும் இன்று பெருமளவில் பாதிப்பு குறைந்துள்ளது. 

தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. மேலும், தடுப்பூசி குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. 

இந்நிலையில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனாவால் ஏற்படும் அபாயம் குறைவு என்று, அதாவது கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுத்தல், இறப்பு ஆகிய அபாயம் குறைவதாக கண்டறிந்துள்ளனர். 

மேலும், கரோனா தடுப்பூசி சில முக்கியமான உளவியல் நன்மைகளைத் தருவதாகவும் தங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளதாக முன்னணி ஆய்வாளர் ஜோனாதன் கோல்டாய் தெரிவித்தார்.

மார்ச் 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 8,090 பெரியவர்களிடம் குறிப்பாக டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 க்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற பெரியவர்களிடம் சோதிக்கப்பட்டது. 

தடுப்பூசி போட்டபின்னர் மன உளைச்சலில் 7 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தடுப்பூசிக்குப் பிறகு குறைந்தது 8 வாரங்கள் வரை மனநலம் மேம்பட்டதாக இருந்துள்ளது. 

சாதாரணமாக தடுப்பூசி கரோனா தொற்று ஏற்படுவதையும் அதன் பாதிப்பையும் குறைப்பதால் நேர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. தடுப்பூசி போடுவதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். இதனால் மன அழுத்தமும் குறைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எப்படியோ, கரோனா தடுப்பூசியால் தொற்றிலிருந்து பாதுகாப்பு மட்டுமின்றி மன அழுத்தமும் சற்று குறைவது ஆறுதலான தகவலே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com