என்ன செய்தால் தலை முடி உதிர்வைத் தடுக்கலாம்?

தலை முடி உதிர்வதை சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தலை முடி உதிர்வதை சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம்.

முடி உதிர்வது என்பது அனைவரும் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்னை. நம்மில் பலர் முடி உதிர்வதைத் தடுக்க பல வழிகளை கடைபிடித்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏமாற்றமே அடைந்திருப்போம். ஒரு நாளில் 50-லிருந்து 100 வரை முடி உதிர்ந்தால் அது இயற்கையானது தான். ஆனால், அதற்கு மேல் அதிகரித்தால் நாம் கண்டிப்பாக கவனம் கொடுக்க வேண்டும்.

நம் அன்றாட வாழ்வில் பின்வரும் சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்வது தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

1. முடியினை அழுத்தமாக சேர்த்துக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், முடியினை அழுத்தமாகக் கட்டும்போது முடியானது அதிகப்படியான உராய்வை சந்திக்க நேரிடும். அந்த அதிகப்படியான உராய்வு முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

2. சில்க் துணிகளால் ஆன  தலையணையைப் பயன்படுத்துவது முடி உதிர்வைக் குறைக்க நல்லத் தீர்வாக இருக்கும். சரியான தலையணைகளை பயன்படுத்தாவிட்டால் அது முடி உதிர்வை அதிகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

3. தலைமுடியினை வலுப்படுத்த தேவையில்லாத வேதிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்துவது முடிகளுக்கு இடையே உள்ள பிணைப்பை குறைத்து முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

4. சந்தைகளில் கிடைக்கும் அனைத்து விதமான ஷாம்புகளையும் பயன்படுத்தாது உங்களது முடி அமைப்புக்கு ஏற்ற ஷாம்பினை வாங்கிப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

5. முடி வளர்வதற்கான எண்ணெய் போன்றவைகளை சரியாக தினசரி பயன்படுத்துவது முடிக்கு வலு சேர்ப்பதோடு முடி உதிர்தலையும் தடுக்கும்.

6. சரியான தூக்கம் மற்றும் உணவுப் பழக்கம் மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் காட்டிலும் மிகவும் முக்கியமானது. மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் முடி உதிர்வதிலிருந்து விடுபட முக்கியமான ஒன்றாகும். அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் உதவிகரமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com