ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியிடமிருந்து கற்க வேண்டிய காதல் பாடம்

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் - ஆலியா பட் இணை நீண்ட காலமாக காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் தம்பதியாக திருமண பந்தத்துக்குள் இணைந்தனர்.
ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியிடமிருந்து கற்க வேண்டிய காதல் பாடம்
ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியிடமிருந்து கற்க வேண்டிய காதல் பாடம்


பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் - ஆலியா பட் இணை நீண்ட காலமாக காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் தம்பதியாக திருமண பந்தத்துக்குள் இணைந்தனர்.

இவர்கள் இருவருக்குள்ளும் பல வேறுபாடுகள் இருந்தாலும், பல தடைகளைத் தாண்டி இவர்கள் தம்பதியாக இணைந்துள்ளனர். காதல் பிறகு திருமணம் என இவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இருவருமே திரை நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்களது காதலுக்கு பல இடையூறுகள் வந்திருக்கலாம். ஆனால் அதனை அவர்கள் வென்றிருக்கிறார்கள். எனவே நட்சத்திரங்களாக இருந்தாலும், இவர்களது வாழ்வில் காதலர்கள் கற்க வேண்டிய சில காதல் பாடங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அவை என்னவென்று பார்க்கலாம்..

முன்பெல்லாம் தம்பதிக்குள் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. ஆனால், ஆலியாவுக்கும் ரன்பீருக்கும் இடையே பத்து ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது. எனவே, உண்மையான காதல் எந்த வயது வித்தியாசத்தையும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.

இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்திருக்கிறார்கள் என்பதற்கு அடுத்தபடியாக, இருவருமே அவரவரை மிகச் சரியாக காதலித்திருக்கிறார்கள். ஒருவர் தன்னை நிச்சயம் காதலிக்க வேண்டும். அவரையே அவர் காதலிக்கவில்லையென்றால் மற்றவரை எப்படி காதல் செய்ய முடியும்? என்கிறார்கள் இவர்கள்.

இருவருமே வளர்கிறார்கள்.. இருவருமே தங்களது தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்பதுவே, அவர்கள் காதலுக்கு மட்டும் அல்ல தொழிலுக்கும் சரியான அளவில் முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சில இளைஞர்கள் காதலுக்காக நாயாக பேயாக அலைந்து வேலையை விட்டுவிடுவார்கள். இதனால் காதலித்த பெண்ணே வேலையில்லாதவன் என்று நிராகரிக்கும் நிலை ஏற்படும். எனவே வேலை முக்கியம் குமாரு.

மரியாதை.. இது மனதிலும் இருக்க வேண்டும். செயலிலும் இருக்க வேண்டும். இவர்கள் இருவருமே எப்போதும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு அன்பை பொழிந்தாலும், அதே வேளையில் மரியாதையையும் மறந்ததில்லை. எப்போதும் மரியாதையை அவர்கள் விட்டுக் கொடுத்ததுமில்லை.

சந்தோஷமான தருணங்களில் உடன் இருப்பதைவிடவும், துக்கமான நேரங்களில் அதிக நேரம் உடன் இருப்பதுவே மிக முக்கியம் என்பதை இவர்கள் நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள். ரன்பீர்  தனது தந்தையை இழந்தபோது, உடைந்து விடாமல் ஆலியா உடன் இருந்து பார்த்துக் கொண்டதை அப்போதே ஊடகங்கள் கொண்டாடின.

அன்பை பரிமாறிக் கொள்வதில் இந்த இணையருக்கு நிகரே இல்லை என்று சொல்லுமளவுக்கு இருவருமே தங்களுக்குள் இருக்கும் காதலை அவ்வப்போது ஊடக வெளிச்சத்துக்கு முன்னிலையிலேயே வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது எளிய பாமர காதலர்களுக்கு பொருந்தாது. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை எப்போதும் வெளிப்படையாக சொல்லிக் கொள்வது நிச்சயம் உங்கள் காதலுக்கு உதவும்.

இருவருமே தற்போது மனமொத்த தம்பதியாக இருந்தாலும், ஆரம்பக் கால காதல் இவர்களுக்குள் அவ்வளவு சரியாக இல்லை என்றாலும் அதனை இருவருமே படிப்படியாக சீரமைத்து தங்களது காதல் வாழ்க்கையை மிகச் சிறப்பாக கட்டமைத்துக் கொண்டார்கள் என்பதுவே உண்மை. எனவே இதுதான் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய காதல் பாடம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com