மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் இவை தெரிய வேண்டும்
By DIN | Published On : 25th June 2022 05:45 PM | Last Updated : 25th June 2022 05:55 PM | அ+அ அ- |

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் இவை தெரிய வேண்டும்
அப்பா செல்லம் என்று பொதுவாக ஒரு வீட்டில் பெண் குழந்தைகளைத்தான் அதிகம் கூறுவார்கள். அதுபோல அம்மா செல்லம் என்று மகன்களைக் கூறுவார்கள்.
அப்படி அப்பா செல்லமாக வளரும் பெண்களுக்கு என்று சில நல்ல குணங்கள் இருக்குமாம். ஒரு தந்தையின் சிறந்த கவனிப்பு மற்றும் பராமரிப்பு போன்றவை, ஒரு பெண்ணுக்கு கிடைக்கும்போது, அவரது தந்தையுடனான உறவு ஆழமானதாக மாறுகிறது.
இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...
அதுமட்டுமல்ல, மகள்களுக்கும் தந்தைக்குமான உறவு நீண்டகாலம் நீடிக்கும்.
- சரி.. தந்தையின் அரவணைப்புடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் உடல் ஆரோக்கியமாக இருப்பார்களாம்.
- அது மட்டுமல்ல, தந்தையுடன் நன்கு பழகும் மகள்கள், எப்போதும் உறவு முறிவுகளால் உடைந்துப்போக மாட்டார்களாம்.
- இதுதான் மிகவும் முக்கியமானதே.. அப்பாக்களின் செல்லமாக வளரும் பெண்கள் கடுமையான கோபம், ஆத்திரமடைவது, மனஉளைச்சல் போன்றவை இல்லாமல், தங்களைத் தாங்களே சுய மதிப்பீடு செய்யும் திறன் படைத்தவர்களாக இருப்பார்களாம்.
- இப்படிப்பட்ட மகள்கள், தங்களுக்கு வரும் பிரச்னைகளை சரியாக எதிர்கொள்ளவும், சிக்கல்களைத் தீர்க்கும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறார்களாம்.
- தந்தையுடன் சிறந்த உறவைக் கொண்டிருக்கும் மகள்கள், எதிர்காலத்தில் வரும் உறவுகளையும் நன்றாக பேணுவார்கள் என்று கூறப்படுகிறது.