தனிமையில் இருப்பது நல்லதா? - ஆய்வு என்ன சொல்கிறது?

சமூகத்தில் தனிமையைவிட சக மனிதர்களுடன் பேசுவது பழகுவது நல்வாழ்க்கைக்கு சிறந்தது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
தனிமையில் இருப்பது நல்லதா? - ஆய்வு என்ன சொல்கிறது?

சமூகத்தில் தனிமையைவிட சக மனிதர்களுடன் பேசுவது, பழகுவது நல்வாழ்க்கைக்கு சிறந்தது என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

குறிப்பாக, மற்றவர்களுடனான அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை என்பதனால் சக மனிதருடன் உரையாடுவது அவசியமானது என்று கூறுகிறது இந்த ஆய்வு. 

இச்சமூகத்தில் தனிமை விரும்பிகள் பலர் இருக்கின்றனர். எந்தவொரு சூழ்நிலையிலும் பெரிதாக யாரையும் எதிர்பார்க்காதவர்கள். அனைவரிடமும் சகஜமாக உரையாடும் ஒருவருக்கு, தனிமையில் இருப்பவரைப் பார்த்தால் மிகவும் வித்தியாசமாகத்தான் தோன்றும். 

அதுபோல தனிமை விரும்பிகள் அமைதியை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், விருப்பமின்றி அதிக தனிமையில் இருப்பது ஆபத்து என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். 

தனியாக இருப்பதைவிட சமூகத்தில் சில மனிதர்களுடன் உரையாடுவது வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும். ஆனால், உரையாட, உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு சரியான நபரைத் தேர்ந்தெடுத்தால் உங்களின் வாழ்க்கை மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

அவ்வாறே இந்த ஆய்வும் கூறுகிறது. சக மனிதர்களுடன் உரையாடுவது, பழகுவது அவர்களின் நல்வாழ்வுக்கு உதவும் என்கிறது. தனிமை அல்லது பிறருடன் இருப்பதைப் பொருத்தே நம் உணர்வுகளும் வேறுபடுகிறது என்பதையும் கூறுகிறது. 

'ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ்' என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள், தாங்கள் தனிமையில் இருந்ததைவிட பிறருடன் இருக்கும்போது மகிழ்ச்சியை உணர்ந்ததாக 60% பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் வேறுபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

சிலர் விருப்பத்தின் பேரில்/கட்டாயத்தின்பேரில் தனிமையிலோ அல்லது பிறருடனோ இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. அதாவது தனிமை விரும்பிகளை கட்டாயப்படுத்தி பிறருடன் பழக வைத்தால் அது சரியல்ல. அதுபோல எப்போதும் கூட்டமாக நண்பர்களுடன் இருப்பவர்களுக்கு தனிமையின் சுகம் தெரியாது. 

எனவே, தனிமையோ, கூட்டமாகவோ விருப்பத்தின்பேரில் இருந்தால் அது நல்வாழ்வுக்கு உதவும் என்றும் ஆனால் பெரும்பாலாக பிறருடன் இருக்கும்போது மனம் மகிழ்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் உசைல் தெரிவிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com