கோடையில் சருமக் குளிர்ச்சிக்கு 'ஃப்ரூட் பேஸ் மாஸ்க்'

கோடைக் காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரிப்பாலும் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினாலும் சருமப் பிரச்னைகள் அதிகம் வருவது இயல்பே. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோடைக் காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரிப்பாலும் சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினாலும் சருமப் பிரச்னைகள் அதிகம் வருவது இயல்பே. 

ஆனால், சில பாதுகாப்பு நடவடிகைகள் மூலமாக இதனை எளிதாக தடுக்க முடியும். முடிந்தவரை வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். உடல் வெப்பநிலையை பராமரிக்க வேண்டும். 

கோடைக் காலத்தில் உடலுக்கு நீரேற்றம் அளிக்கக்கூடிய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும். 

அடுத்ததாக வெளிப்புறத்தில் சருமத்தைப் பாதுகாக்க பழங்களைக் கொண்டு 'பேஸ் மாஸ்க்' போடலாம். 

கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த வெள்ளரிக்காயை பயன்படுத்துகின்றனர். கண்களில் சோர்வு நீங்கி கருவளையம் போக்க உதவுகிறது. 

இதுபோல ஒட்டுமொத்தமாக சருமத்தைப் பாதுகாக்க மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு பேஸ் மாஸ்க் போடுங்கள். 

பழத்தை நன்றாக நசுக்கியோ அல்லது மிக்சியில் போட்டு அரைத்தோ முகத்தில் அப்ளை செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவிவிடுங்கள். 

வெய்யில் அதிகரித்த நேரத்தில் இவ்வாறு செய்துவர சருமம் பொலிவுடன் பாதுகாப்பாகவும் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com