தோல் சுருக்கம், முகப்பரு ஏற்பட இதுதான் காரணமா?
By DIN | Published On : 06th October 2022 01:19 PM | Last Updated : 06th October 2022 01:24 PM | அ+அ அ- |

பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கும் குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் அடிப்படை அவசியமானது அயோடின் சத்து.
அயோடின் உப்பு, முட்டை, கடல் உணவுகள், தயிர், ஸ்ட்ராபெர்ரி, சீஸ், உருளைக்கிழங்கு, நெல்லி, மீன், கடற்பாசி, இதர பால் பொருள்களில் அயோடின் சத்து இருக்கிறது. வயது வந்த ஆண்கள், பெண்கள் தினமும் 150 மைக்ரோகிராம் (எம்சிஜி) என்ற அளவிலும் கர்ப்பிணி, பாலூட்டும் பெண்கள் முறையே 220 மற்றும் 290 எம்சிஜி, . குழந்தைகளுக்கு 130 எம்சிஜி எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
அயோடின் குறைபாட்டால் தைராய்டு சுரப்பியில் பிரச்னை ஏற்பட்டு முன்கழுத்துக் கழலை நோய் ஏற்படும்.
மேலும், பல உடல் செயல்பாடுகளை பாதிப்பதுடன் சருமத்தை வறண்டு போகச் செய்யும். முகப்பரு ஏற்பட இதுவும் ஒரு காரணம். தலைமுடியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
நம் உடலில் அயோடின் தானாக ஏதும் உற்பத்தி ஆகாது என்பதால் சத்தைப் பெற கண்டிப்பாக உணவில் அயோடின் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | ஏபிசி ஜூஸ் தெரியும்! அதென்ன 'க்ரீன் ஜூஸ்'?
♦ அயோடின், தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் கொல்லும்.
♦ மனித உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், தைராய்டு ஹார்மோன் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
♦ சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது. உடலில் போதுமான அளவு அயோடின் இருந்தால், சருமத்தின் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். .
♦ சிலருக்கு அதிக வியர்வை ஏற்படும். அயோடின் குறைவாக இருந்தால் இவ்வாறு இருக்கும். உடலில் வியர்வை சுரக்க வேண்டும். ஆனால், அதிகம் சுரந்தால் அயோடின் குறைபாடாக இருக்கலாம்.
♦ முகப்பரு ஏற்படுவதற்கு அதிகபட்ச காரணம் அயோடினாக இருக்கலாம். அயோடின் சரியான அளவு இருந்தால், பருக்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது
♦ சருமம் வறண்டு மோசமாக இருந்தாலும் அயோடின் பொருள்களை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதனை சரிசெய்யலாம்.
♦ தலைமுடி உதிர்தல் உள்ளிட்ட முடி தொடர்பான பிரச்னைகளுக்கும் அயோடின் குறைபாடு காரணமாக இருக்கலாம்.
இதையும் படிக்க | 'கண்கள் முக்கியம்' - மறந்தும் இதையெல்லாம் செஞ்சுடாதீங்க!