பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பாதாமில் இதய ஆரோக்கியத்திற்கான  நன்மைகள் அதிகம் உள்ளன. பாதாம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தவை. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாதாமில் இதய ஆரோக்கியத்திற்கான  நன்மைகள் அதிகம் உள்ளன. பாதாம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தவை. 

நீங்கள் தினமும் பருப்புகள்(nuts) சாப்பிட வேண்டும். நீங்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான பருப்புகளில் பாதாம் ஒன்றாகும். தினமும் பாதாம் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். 

பல இந்திய வீடுகளில் ஊறவைத்த பாதாம் பருப்புடன் தங்கள் நாளைத் தொடங்குவது ஒரு வழக்கமாக உள்ளது. பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பாதாமில் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பண்புகள் உள்ளன. வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாதாமில் இருப்பதால் அவை இதயத்திற்கு உகந்தது ஆகும். பாதாம் சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. வைட்டமின் ஈ நிறைந்தது

வைட்டமின் ஈ உங்கள் ஆரோக்கியத்திற்கு சில அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. இந்த வைட்டமின் ஈ உங்கள் தோல் மற்றும் முடிக்கு நல்லது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவுகிறது.

3. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்

உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு தீவிரமான ஆரோக்கியமற்ற உடல்நிலை ஆகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

4. ஆரோக்கியமான எடையை பராமரிக்கலாம்

பாதாம் ஒரு ஆரோக்கியமான உணவு. ஒரு சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால், உங்களை நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்கும் மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளதால், இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.

5. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதாம் ஒரு ஆரோக்கியமான உணவு. இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க பாதாம் உதவும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளிகள் இதய நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர். இதை பாதாம் மூலம் கட்டுப்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட வேண்டும்?

6 முதல் 8 பாதாம்  கொட்டைகளை வரை சாப்பிடலாம், என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஊறவைத்த பாதாம் பருப்பில் நன்மை அதிகம். அவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். வறுத்த மற்றும் உப்பு சேர்க்கப்பட்ட பாதாம் பருப்புகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

பாதாம் கொட்டைகளில் நன்மைகள் இருந்தாலும், அதை மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு உட்கொள்வது சிறந்த ஆலோசனையாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com