மாதவிடாயை சீராக்க உதவும் சாலியா விதை: ஆய்வில் தகவல்

சாலியா விதைகள் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மாதவிடாயை சீராக்க உதவும் சாலியா விதை: ஆய்வில் தகவல்

சாலியா விதைகள் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சாலியா விதையில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. இது ஆங்கிலத்தில் garden cress seeds என அழைக்கப்படுகிறது. இவ்விதையில் வைட்டமின் ஏ, இ, சி, நார்சத்துகள், புரதசத்துகள், இரும்பு சத்துகள் உள்ளது.


1.  ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

சாலியா விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சாலியா உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளில் 12 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.

2. இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது

சாலியா விதைகளில் புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், அவை ஆற்றல்மிக்க பால்சுரப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும் இந்த விதை உதவுகிறது.

3. மாதவிடாயை சீராக்க உதவுகின்றன

கர்ப்பத்தைத் திட்டமிட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. சாலியா விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றுகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவுகிறது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை இயல்பாக்குவதற்கும் ஒரு இயற்கையான வழியாகும்.

4. எடை குறைக்க உதவுகிறது

சாலியா விதைகளில், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருப்பதால், பசியின்மை மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகின்றன. இந்த விதைகளில் உள்ள நல்ல புரதச் சத்து, உடலின் தசைகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்ஸிடன்ட்கள்), ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ உள்ள சாலியா விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

6. மலச்சிக்கலைப் போக்கும்

சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து,  சீரான குடல் இயக்கத்தை உருவாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்னைகளை போக்க உதவுகின்றன.

சாலியா விதைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. சாலியா விதைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்னைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com