நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சங்கு பூ: ஆய்வு

நீல சங்கு பூ நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சங்கு பூ: ஆய்வு

நீல சங்கு பூ கொடியில் வளரும். பூஜைககளில் பயன்படுத்தப்படும் இந்த பூவில் அற்புதமான மருத்துவ பயன்கள் உள்ளன, குறிப்பாக நினைவாற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த அற்புதமான தாவரத்தின் மீது அறிவியல் ஆய்வுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.  சங்கு பூவை தேநீராக்கி உட்கொள்ளலாம்.


சங்கு பூ தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இது வலி மற்றும் வீக்கம் இரண்டையும் குறைக்கிறது.

சங்கு பூ  தேநீர் நாள்பட்ட சோர்வால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட சோர்வை பெரிதும் குணப்படுத்துகிறது. இந்த தேநீரில் வலி நிவாரணி பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கு பூ தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.  மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. மன அழுத்தம் அல்லது கவலை மற்றும் தூக்கம் கடினமாக இருந்தால், சில நாட்களுக்கு தொடர்ந்து சங்கு பூ தேநீர் உட்கொள்ளலாம். இது மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளை சங்கு பூ கொண்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்ற அனைத்து சுவாச பிரச்சனைகளுக்கும் சிகிச்சைக்காக பயன்படுகிறது.  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சங்கு பூ சருமத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

சங்கு பூ தேநீர் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. சங்கு பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், அல்சர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வயிற்றுப் புண் இருந்தால், எலுமிச்சை சாறு சேர்க்காமல் இந்த தேநீரை உட்கொள்ளலாம்.

சங்கு பூ தேநீரில்  ரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த தேநீர், நீரிழிவு மருந்துகளுடன் இணைந்து இரத்த சர்க்கரை அளவை கடுமையாக குறைக்கும்.

சங்கு பூ தேநீரை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்னைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com