பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!
By DIN | Published On : 29th May 2023 07:38 PM | Last Updated : 29th May 2023 07:38 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
பூசணி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பூசணி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கையை பூசணி விதைகள் அதிகரிக்கின்றன. பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூசணி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்கள் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
உணவில் பூசணி விதைகளை சேர்ப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இதில் மெக்னீசியம் அதிகம் உள்ளதால், மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பூசணி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.
இதையும் படிக்க: உடல் எடையைக் குறைக்கணுமா? இந்த தப்பெல்லாம் செஞ்சுடாதீங்க!
எனினும், பூசணி விதைகளை உட்கொள்ளும்போது மருத்துவரின் ஆலோசனையை மேற்கொள்வது சிறந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...