புதிய லாக் வசதி: தீவிர முயற்சியில் வாட்ஸ்ஆப்

புதிய லாக் வசதியை ஏற்படுத்த தீவிர முயற்சியில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது.
புதிய லாக் வசதி: தீவிர முயற்சியில் வாட்ஸ்ஆப்

பயனர்களின் விவரங்களை பாதுகாக்கும் முயற்சியில் வாட்ஸ்ஆப் தொடர்ந்து தனது தனிப்பட்ட திறனைக் காட்டி வரும் நிலையில், சாட்களை லாக் செய்யும் புதிய வசதியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது வாட்ஸ்ஆப்.

பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க தன்னால் இயன்றவரை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்ஆப். இந்நிறுவனம், கடந்த சில மாதங்களாக, பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சில குறிப்பிட்ட உரையாடல்களை லாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துதல், முழு என்க்ரிப்ஷன் குறியீடு, பகிரப்பட்ட புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதைத் தடுப்பது போன்ற பல அம்சங்களை மேம்படுத்த தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய லாக் வசதி: தீவிர முயற்சியில் வாட்ஸ்ஆப்
வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார்?

இப்போது, ​​பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க வாட்ஸ்ஆப் ஒரு படி மேலே சென்று, சில குறிப்பிட்ட அரட்டைகளை லாக் செய்யும் புதிய வசதியை ஏற்படுத்த முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, வாட்ஸ்ஆப்பின் பீட்டா வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உடனடி செய்தியிடல் இயங்குதளமானது, ஒரு பயனர் தனது வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முதன்மை சாதனங்களில் மட்டுமல்லாமல், அது டெஸ்க்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் இணைக்கப்பட்டிருந்தாலும், அதிலும் சில அரட்டைகளை லாக் செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தைக் கொண்டு வர பணியாற்றி வருகிறது.

புதிய லாக் வசதி: தீவிர முயற்சியில் வாட்ஸ்ஆப்
தோ்தல் களத்தில் ‘சின்ன’ பிரச்னை!

தற்போது, முதன்மை சாதனங்களில் மட்டுமே, சில அரட்டைகளை லாக் செய்யும் வசதி உள்ளது. இனி, வாட்ஸ்ஆப் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களிலும் அரட்டைகளை லாக் செய்யும் வசதி வருவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com