காஃபி பிரியர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவது குறைவு! - ஆய்வில் தகவல்

காஃபி குடிப்பவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவது குறைவு என்பதை ஆய்வாளர்கள் தங்கள் புதிய ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காஃபி குடிப்பவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவது குறைவு என்பதை ஆய்வாளர்கள் தங்கள் புதிய ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர். 

காஃபி குடிக்கும் பழக்கம் நல்லதா? கெட்டதா? என்பது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

காஃபி அதிகம் குடிப்பது நல்லதல்ல என்பதே மக்களிடம் காணப்படும் பொதுவான கருத்தாக இருக்கிறது. காஃபி குடிப்பதால் சிலருக்கு படபடப்பு, பதற்றம், தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறு போன்ற உடலியல் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறினாலும், காஃபிக்கு சாதகமான முடிவுகளே அதிகம் உள்ளன. 

உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுமேயானால், காஃபி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், காஃபி பிரியர்கள், உங்கள் காஃபி பயணத்தைத் தொடரும் விதமாகவே சமீபத்திய இந்த ஆய்வின் முடிவும் வந்துள்ளன. 

ஏற்கெனவே, காஃபி குடிப்பது உடல்நலத்தை மேம்படுத்தி ஆயுளை அதிகரிக்கச் செய்யும், காஃபி குடிக்கும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவு, காஃபியில் உள்ள காஃபின் எனும் பொருள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது, மன அழுத்தத்தைக் குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் உள்ள நிலையில், காஃபி குடிப்பவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்று புதிய ஆய்வு கூறுகிறது. 

நாள் ஒன்றுக்கு ஒரு கப் காஃபி குடிப்பவர்களுக்கு 5% முதல் 12% வரையிலும், நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காஃபி குடித்தவர்களில் இது 30% வரையிலும் இதய செயலிழப்பு ஏற்படுவது குறைவு என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஃபியில் உள்ள காஃபின் எனும் வேதிப்பொருள் இதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்டுகள், ஹார்மோன்களைத் தூண்டி சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.  ஹார்மோன்கள் தூண்டப்பட்டு மூளையை சுறுசுறுப்பாக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், பல நன்மைகளை அளிக்கும் இந்த காஃபி என்பது பால், சர்க்கரை, டிகாஷன் அதிகம் சேர்த்த காஃபி அல்ல. காபியுடன் வெறுமனே கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்த 'பிளாக் காபி'. இந்த ஆய்விலும் சர்க்கரை சேர்க்காத, பால் சேர்க்காத காபியைத் தான் ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். 

பால், சர்க்கரை அல்லாத கருப்பட்டி அல்லது வெல்லம் மட்டும் சேர்த்து தயாரிக்கும் 'பிளாக் காபி' குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்று கூறுகின்றனர் உடலியல் நிபுணர்கள். 

மேற்குறிப்பிட்ட காபியின் அனைத்து பலன்களையும் பெற 'பிளாக் காபி' அருந்துங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com