உடற்பயிற்சியின்போது பாடல்கள் கேட்பது நல்லதா?

உடற்பயிற்சியின்போது இசையைக் கேட்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் செயல்திறனை அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
உடற்பயிற்சியின்போது பாடல்கள் கேட்பது நல்லதா?

பெரும்பாலாக அனைவரது வாழ்விலும் இசை ஓர் அங்கமாகிவிட்டது. இசையை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். காலையில் எழும்போது, இரவு தூக்கத்தின்போது, வேலை செய்யும்போது, பயணத்தின்போது நண்பர்களுடன் இருக்கும்போது என நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசையின் தன்மையை ருசித்து வருகிறார்கள் இசை ரசிகர்கள். 

இவ்வாறு இசையை, குறிப்பாக மெல்லிய இசையை கேட்பதால் மனச்சோர்வு, மன அழுத்தம் குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், உடற்பயிற்சியின்போது இசையைக் கேட்பது நல்லதா என்பது குறித்து என்று எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வினை மேற்கொண்டனர். 

அதன்படி, உடல் இயங்கும்போது உடல் இயக்கத்திற்கேற்ப கேட்கப்படும் இசையானது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் செயல்திறனை மேம்படுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு. 

ஆய்வின் கண்டுபிடிப்புகள் மனித விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த ஆய்வில் 18  உடற்பயிற்சி செய்வோர் கலந்துகொண்டனர். இதில் இரண்டு விதமாக சோதனை செய்யப்பட்டது. 

அதாவது அதிக வேகத்தில் ஓடும்போதும் மெதுவான வேகத்தில் ஓடும்போதும் இசை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சோதனை நடத்தப்பட்டது. 

இதற்காக பயிற்சியின்போது ஊக்கத்தை ஏற்படுத்தும் விதமான பாடல்களை கேட்க அறிவுறுத்தப்பட்டனர்.  அதன்பின்னர் இசையை கேட்காமல் உடற்பயிற்சி செய்தனர். இதில் இரண்டு சோதனைகளிலும் அவரது பயிற்சித் திறன், மனநலம் உள்ளிட்டவை குறித்து சோதிக்கப்பட்டதில் இசையை கேட்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாகவும் அதேநேரத்தில் உடற்பயிற்சி செயல்திறன் நன்றாகவும் இருந்துள்ளது . 

உடற்பயிற்சியின்போது பாடல்களை கேட்கும்போது மனச்சோர்வு குறைகிறது. ஒருவரின் உடற்பயிற்சித் திறனை அதிகரிக்க இசையை பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் உடற்பயிற்சியின்போது தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்கும்பட்சத்தில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம்.

மேலும் உடற்பயிற்சிக்கு ஏற்ற தாளத்தை கேட்கலாம். வேகமான உடற்பயிற்சி செய்யும்போது வேகமான ஒரு இசையைக் கேட்க வேண்டும். இம்மாதிரியான இசைகள் ஒவ்வொருவரிடம் வெவ்வேறு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com