'பொதுமுடக்க காலத்தில் 50% குழந்தைகள் மன உளைச்சலில் இருந்தனர்'

கரோனா பொதுமுடக்க காலத்தில் 50% குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
'பொதுமுடக்க காலத்தில் 50% குழந்தைகள் மன உளைச்சலில் இருந்தனர்'

கரோனா பொதுமுடக்க காலத்தில் 50% குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் மற்றும் குழந்தைகள் உரிமைகள் அமைப்பு இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கரோனா தொற்றுநோய் காலத்தில் சுமார் 50 சதவீத குழந்தைகள் அதிக மன அழுத்தத்துடன் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 13 முக்கிய நகரங்களில் 9 முதல் 17 வயது வரையிலான 800க்கும் மேற்பட்ட குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் (60%) மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர், அவர்களில் பெரும்பாலோர் நல்ல தரமான உணவு (78.9%) மற்றும் தூக்கம் (74.9%) இருப்பதாகக் கூறினர், 48.7% குழந்தைகள் பல்வேறு காரணங்களால் மாறுபட்டு இருந்ததாகத் தெரிவித்தனர். 

41.9% குழந்தைகள் கவலைப்படுவதாகவும் 45.2% குழந்தைகள் வீட்டிலிருந்து சலித்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஒரு சிலர் பொதுமுடக்கம் அல்லாத ஒரு சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்தனர். 

குடும்பத்தின் வருமானம் குறைவு குழந்தைகளின் இந்த மன அழுத்தத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com