நகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைவு! காரணம்?

நகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைவு என சமீபத்திய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைவு! காரணம்?

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வில், மக்கள்தொகையில் ஆண்களை விட அதிக சதவீதம் பெண்களைக் கொண்ட நகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் பாலின விகிதங்கள், திருமணங்கள், கருவுறுதல், குழந்தை பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுடன் நகரமயமாக்கல் மற்றும் சமூகம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அமெரிக்காவின் துர்கு பல்கலைக்கழகம், ஹெல்சின்கி பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

பெண்கள் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களுக்குச் செல்கின்றனர். அவர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் மற்றும் குழந்தை பராமரிப்புச் சூழல் குறைவாக இருப்பதாலும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை பெரிதாக விரும்பவில்லை. எனினும்  வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள்.  

கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைவாக இருந்தது. அதேநேரத்தில் நகரங்களில், ஆண்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் அதிகரிக்கும்போது ஒரு குழந்தை பெறப்படுகிறது என்ற நிகழ்தகவு, நகர்ப்புறங்களில் 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே கிராமப்புறங்களில் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பல நகரங்களில் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளதும் அங்குள்ள பெண்கள் குறைவான விகிதத்திலேயே குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த ஆய்வு கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com