நீங்கள் செல்ஃபோனை அடிக்கடி கீழே போடுபவரா? இது உங்களுக்குத்தான்!

அதி நவீன ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது செலுத்தும் கவனத்தை விட, அதைப் பாதுகாப்பதில் தான்
நீங்கள் செல்ஃபோனை அடிக்கடி கீழே போடுபவரா? இது உங்களுக்குத்தான்!

அதி நவீன ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது செலுத்தும் கவனத்தை விட, அதைப் பாதுகாப்பதில் தான் அதன் பயன்பாட்டாளர்களுக்கு அதிக கவலை என்றே கூறலாம். ஸ்மார்ட் போன்களின் அதிக விலையே இதற்கு காரணம்.

அதுவும் கை தவறி கீழே விழுந்துவிட்டால், பாதுகாப்பு கவசம் இருந்தாலும் போன்களின் ஸ்கிரீன் உடைந்து விடுகிறது. அப்படி உடைந்த போனை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய போனையே வாங்கிவிடலாம். பழுது பார்க்கும் கட்டணமும், மாற்றுப் பொருளின் விலையும் அவ்வளவு அதிகம்.

கார்களில் விபத்து ஏற்பட்டால் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க அமைக்கப்பட்டுள்ள ஏர்பேக்குகளைப் போல் ஸ்மார்ட் போன்களில் கொண்டு வர பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஏன், சிலர் ஜெட் வேகத்தில் செயல்படும் சிறு மோட்டார்களைப் பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொண்டனர். இவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன.

ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த ஆலேன் பல்கலைக்கழக மாணவர் பிலீப் ஃபிரன்செலின் 'ஏடி கேஸ்' எனும் புதிய பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார். சாதாரண பாதுகாப்புக் கவசத்தைப்போல் காட்சியளிக்கும் இந்த 'ஏடி கேஸ்'-இல் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், ஸ்மார்ட்போன் கீழே விழுவதற்கு முன்பு, தனது நான்கு கால்களை தானாக விரித்து எந்த விதப் பாதிப்புமின்றி பாதுகாத்துவிடுகிறது.

'மெட்டல் ஸ்பிரிங்குகள்' வைத்து 'ஏடி கேஸை’ அவர் உருவாக்கியுள்ளார். கீழே விழுந்து விரிந்த இந்த மெட்டல் ஸ்பிரிங் கால்களை மீண்டும் உள்ளே மடித்து விட்டு வழக்கம் போல் பயன்படுத்தலாம்.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் குறைவான விலையில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த 'ஏடி கேஸ்'ஸின் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்தக் கண்டுபிடிப்புக்காக பிலீப்புக்கு ஜெர்மன் மெக்டிரானிக்ஸ் அமைப்பு தேசிய விருது வழங்கியுள்ளது. தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைக்கு பதிவு செய்துள்ள பிலீப், தனது நண்பருடன் சேர்ந்து 'ஏடி கேஸ்'ஸை இன்னும் சில தினங்களில் சந்தைப்படுத்த உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com