எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என சாதித்துக் காட்டிய ஹேக்கர்ஒன் நிறுவனம்!

இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட ஹேக்கர்ஒன் 20,000 டாலர்களை சம்பாதிக்கிறது!
எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என சாதித்துக் காட்டிய ஹேக்கர்ஒன் நிறுவனம்!

இந்த ஆண்டு ஆகஸ்டில், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஹேக்கர்ஒன் எனும் நிறுவனம் ஒரு வருடத்தில் 21 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளதாக தகவலை வெளிப்படுத்தினர். இதற்கு முக்கிய காரணம், உலகளவில் மால்வேர் பிரச்னைகளைச் சரி செய்ய அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சி 214 சதவிகிதம் அதிகரித்துள்ளதால்தான் என்றனர்.

ஹேக்கர்ஒன் நிறுவனத்தின் செயல்பாடு என்னவெனில் அவர்கள் ஒட்டுமொத்த ஹேக்கர்களை ஒருங்கிணைத்து, ஏனைய தளங்களிலுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து, பாதிப்புக்களைக் குறைப்பதாகும். இது ஹேக்கர் சமூகத்துடன் ஒத்துழைப்பைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமான தொழில்முறையாகும். பக் பவுண்டி உள்ளிட்ட திட்டங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

பல்வேறு இணையக் கணக்குகளை இருந்த இடத்தில் இருந்தே உடைத்து அவற்றின் கடவுச் சொல்லைக் லாவகமாகக் கைப்பற்றும் ஹேக்கர்ஸ் உலகம் முழுவதும் உள்ளனர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் வழிமுறை. ஒரு சமயம் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்ட ஹேக்கர் ஒன், ஸ்டார்பக்ஸ், இன்ஸ்டாகிராம், கோல்ட்மேன் சாச்ஸ், ட்விட்டர் மற்றும் ஜொமாடோ போன்ற வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய பம்பர் தொகையை நிர்ணயித்தது, அதாவது தங்கள் பிரச்னையை சீர் செய்யும் பயனருக்கு 20,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, "Haxta4ok00" என்று அழைக்கப்படும் பயனருக்கு தற்போது 20,000 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

"ஹேக்கர்ஒன் இயங்குதளத்தில் இயங்கும் பிற நிரல்கள் தொடர்பான தகவல்களுக்கு ஒரு ஹேக்கருக்கு குறுகிய காலத்திற்கு அணுக முடியும் என்பதாக இருந்தது. ஹேக்கர்ஒன் திட்டங்களில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த அறிக்கை கிடைத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நிரல்கள் தொடர்பு கொள்ளப்பட்டன" என்று ஹேக்கர்ஒன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது .

ஹேக்கர் மற்றும் ஹேக்கர்ஒன் சமூக உறுப்பினர் தளத்திற்கு அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்: "எல்லா அறிக்கைகளையும் எங்களால் படிக்க முடியும் - பாதுகாப்பு மற்றும் பல திட்டங்கள் உட்பட."

இதற்கு ஹேக்கர்ஒன் பதிலளித்தது: "நீங்கள் எங்கள்  கணக்கை அணுகுவதை, அனைத்து அறிக்கைகளையும் பக்கங்களையும் திறந்து வைத்திருப்பது பற்றியெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?"

Haxta4ok00 கூறியது: "எங்களுடைய தாக்கத்தை உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறு செய்தோம், ஆனால் நாங்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை. உடனடியாக உங்களுக்குத் தெரிவித்தோம். எங்களுக்கு தருவதாக உத்திரவாதம் கொடுத்த உரிமைகளை முற்றிலும் பெற முடியுமா என்ற சந்தேகத்தின் பெயரில்தான் அப்படி செய்தோம். மற்றபடி வேறெந்த நோக்கமும் இல்லை. இதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது தவிர எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் இது ஒரு நேர்மறையான ஹேக்  (white hack)  மட்டுமே." நேர்மையான ஹேக்கிங்கில் கணினி பாதுகாப்பு வல்லுநர்களால் பாதுகாக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நெட்வொர்க்குகளுக்குள் நுழைந்து அவற்றின் நம்பகத்தன்மையை சோதிப்பதாகும்.

உணவு விநியோகத் தளமான ஜொமாடோவில் பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்து சரி செய்வதற்காக 435 ஹேக்கர்களுக்கு,  100,000 டாலர்களை வழங்கியுள்ளது. ஜூலை 2017 முதல் ஹேக்கர்ஒனின் பக் பவுண்டி திட்டத்தின் உதவியுடன், ஜோமாடோ 775 பாதிப்புக்களை வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

( ஐஏஎன்எஸ் அறிக்கையிலிருந்து திருத்தப்பட்டது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com