நெட்ஃபிளிக்ஸில் இந்தியர்கள்தான் முதலிடம்! 70% பயனர்கள் வாரத்திற்கு ஒரு படம் பார்க்கின்றனர்

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 70% பயனர்கள் வாரத்திற்கு குறைந்தது ஒரு படமாவது பார்த்து விடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நெட்ஃபிளிக்ஸில் இந்தியர்கள்தான் முதலிடம்! 70% பயனர்கள் வாரத்திற்கு ஒரு படம் பார்க்கின்றனர்

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 70% பயனர்கள் வாரத்திற்கு குறைந்தது ஒரு படமாவது பார்த்து விடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

திரைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பும் ஆன்லைன் இணையதளமான நெட்ஃபிளிக்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 70% சந்தாதாரர்கள் வாரத்திற்கு ஒருபடமாவது நெட்ஃபிளிக்ஸில் பார்ப்பதாகவும் இதன்மூலமாக மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் நெட்ஃபிளிக்ஸை அதிக நேரம் பயன்படுத்துவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங்கில் 2019ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான தலைப்புகளின் பட்டியலை அறிவித்துள்ளது. சேக்ரட் கேம்ஸ் சீசன் 2 (தொடர்) இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் மிகவும் பிரபலமான வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கபீர் சிங் (படம்), ஆர்டிகிள்15 ( படம்), பார்டு ஆஃப் பிளட் (தொடர்), டிரைவ் (படம்), பட்லா (படம்), ஹவுஸ் அரெஸ்ட் (படம்), 6 அண்டர்கிரவுண்டு (படம்), டெல்லி க்ரைம்(தொடர்) மற்றும் சாப்ஸ்டிக்ஸ் (படம்) ஆகியவை முறையே முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளது. மேலும், விடுமுறை நாட்களில் நெட்ஃபிளிக்ஸில் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 

நெட்ஃபிளிக்ஸில் பல புதுமையான தொடர்களை தேடுவதாகவும், பிரபலமான படங்களையும், தொடர்களையும் குறைந்த செலவில் காண முடிவதாகவும் சந்தாதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

"நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பிரபலமாகிவிட்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com