கடனை உரிய முறையில் ஒருவர் திருப்பிச் செலுத்தியிருந்தால்

சொந்தமாகத் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் அதற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்
கடனை உரிய முறையில் ஒருவர் திருப்பிச் செலுத்தியிருந்தால்

சொந்தமாகத் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் அதற்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று கடன் வாங்க தயார் ஆவது. அதற்கு CIBIL ஸ்கோரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். Credit Information Bureau (india) Limited என்பதன் சுருக்கமே CIBIL.

இந்த நிறுவனத்தின் பணி கடன் கேட்பவரின் நேர்மையை அளவிட்டு அதைப் புள்ளிவிவரமாக வழங்குவதே.

அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, வாக்காளர் அட்டை எண், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற விவரங்களை இந்நிறுவனம் சேகரிக்கிறது. இதன் மூலம் ஒருவர் ஒரு வங்கியில் கடன் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் செலுத்தாவிட்டால், அந்த விவரத்தைப் பதிந்து கொள்கிறது. இதனால் புதிய கடனை வேறு ஒரு வங்கியில் ஒருவர் வாங்க முடியாது. 

கடனை உரிய முறையில் ஒருவர் திருப்பிச் செலுத்தியிருந்தால் அந்த விவரத்தையும் ஒரு வங்கி CIBIL மூலமாகத் தெரிந்து கொண்டு கடன் வழங்கும். 
எனவே தனியார் வங்கியில் எங்கு கடன் பெற்றிருந்தாலும் உரிய காலத்தில் செலுத்துங்கள். அப்போதுதான் புதிய கடன் பெற்றுத் தொழில் தொடங்க முடியும்.
-எம்.ஞானசேகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com