மும்பை, புது தில்லி, பெங்களூரு.. அதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள் பற்றிய அறிக்கை!

இந்த இணைய தாக்குதல்களின் ஹிட்லிஸ்டில் ஸ்மார்ட் நகரங்கள், நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து துறைகள் போன்றவை தரவரிசையில் முன்னணியில் உள்ளன
maximum cyber attacks
maximum cyber attacks

பெங்களூரு, நவம்பர் 13: இந்தியாவில் சைபர் அட்டாக் என்று சொல்லப்படக்கூடிய இணையத் தாக்குதல் 26% அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. இதில் கடந்த ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஒருங்கிணைந்து நடந்ததாகக் கருதப்படும் 38% இணையத் தாக்குதலின் பங்கும் உண்டு எனப் புதன்கிழமை வெளிவந்த புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. 

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தொலைத் தொடர்பு தீர்வுகள் வழங்கு நிறுவனமான (telecom solutions provider)  சுபெக்ஸ் தயாரித்த அறிக்கையில் நாட்டில் 3,500 க்கும் மேற்பட்ட மாடல்களில் புதிது புதிதாக மால்வேர்கள் அடையாளம் காணப்பட்டு.. அவற்றின் எண்ணிக்கையிலும் 37 சதவீதம் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இணைய தாக்குதல்களின் ஹிட்லிஸ்டில் ஸ்மார்ட் நகரங்கள், நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து துறைகள் போன்றவை தரவரிசையில் முன்னணியில் உள்ளன என்று மூன்றாம் காலாண்டிற்கான (ஜூலை-செப்டம்பர் காலம்) State of Internet of Things (IoT) ன் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

"மூலதன தீவிர திட்டங்கள் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் தடம் அதிகரிக்கும் போது, ​​ஹேக்கர்கள்.. மேற்கண்ட நிறுவனங்களின் தரவுகளைத் திருடுதல் மற்றும் தகவல் திருட்டு போன்ற பெரிய அளவிலான இடையூறுகளை இலக்காகக் கொண்டுள்ளனர்" என்று சுபெக்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினோத் குமார் கூறினார்.

"நாட்டிற்கு எதிரான சைபர் தாக்குதல்களின் அதிகரிப்பு மற்றும் வலுவான புவிசார் அரசியல் தொடர்பு ஆகியவை நமது முக்கியமான உள்கட்டமைப்பைக் குறிவைப்பதில் அதிக அளவு ஆர்வத்தைக் காட்டுகின்றன. இணைய தாக்குதல்களைப் பணமாக்குவதற்கான திறனை மேம்படுத்த ஹேக்கர்கள் செயல்படுகிறார்கள்," என்றும் அவர் எச்சரித்தார்.

பல்வேறு துறைசார் நிறுவனங்களைக் குறிவைத்து இணைய உலகில் அவிழ்த்து விடப்பட்டுள்ள பலவகையான மால்வேர்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் வேகப்படுத்தப் பட்டிருக்கின்றன. முக்கியமாக புதுப்பிக்கத் தக்க ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள புதிய முயற்சிகளின் மீது ஏவி விடப்பட்டுள்ள மால்வேர்கள் குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 36% மால்வேர்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியப்படக்கூடிய விதத்திலும் மேலும் 14% மால்வேர்கள் கண்டறியப்பட முடியாத நிலையிலும் நீடிப்பதாக புதிய அறிக்கை கூறுகிறது.

முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஊடுருவியுள்ளதாகக் கருதப்படும் மால்வேர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.

"ஹேக்கர்கள் பெரிய அளவிலான இடையூறுகளை இலக்காகக் கொண்டுள்ள காரணத்தால், அது மேற்கண்ட நிறுவனங்களின் எதிர்கால முதலீடுகளில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்தப் புதிய அறிக்கை கூறுகிறது.

நன்றி: IANS

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com