'ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6' -இல் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ஆப்பிள் நிறுவனம் 'ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6' யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள். 
ஆப்பிள் வாட்ச்
ஆப்பிள் வாட்ச்

இரு தினங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் 'ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6' யை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-இல் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

► புதிய ஆப்பிள் வாட்ச் 15 நொடிகளில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை(SpO2) கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டது. இதற்காக வைக்கப்பட்டுள்ள சென்சார் பச்சை, சிகப்பு மற்றும் இன்ப்ரா ரெட் எல்.இ.டி. கிளஸ்டர்களை பயன்படுத்துகிறது.

► ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரக பிராசஸர் உள்ளது. இது முந்தைய சீரிஸில் உள்ள பிராசஸர்களை விட நவீனமானது. இதனால் உடல் செயல்பாடு அளவுகளை மிகவும் துல்லியமாக கணிக்க முடியும். 

► ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே உள்பட பல நவீன அம்சங்கள் கொண்டுள்ளது. 

► ஸ்பேஸ் பிளாக் டைட்டானியம், எல்லோவ் கோல்டு, வாட்ச் புளூ அலுமினியம் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

► 1.5 மணி நேரத்தில் வாட்ச் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். அதிகபட்சமாக 18 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 

► பாராமெட்ரிக் அல்டிமீட்டர் மூலமாக ஜிபிஎஸ் மற்றும் வை - பை நெட்ஒர்க்குகளை அடையாளம் காட்டும். 

► ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஓ.எஸ். 7 யை கொண்டுள்ளது. 

► இதுதவிர, ஸ்மார்ட் போனுடன் இணைப்பு, அழைப்புகள், குறுஞ்செய்திகள் மேலாண்மை, ரீமைண்டர், உடலியல் செயல்பாடுகளை கணக்கிடல் உள்ளிட்ட வழக்கமான சேவைகளையும் தருகிறது. 

► ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை (இந்திய மதிப்பில்)ரூ. 40,000 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com