ரகசியமாகும் யூடியூப் ’டிஸ்லைக்’ எண்ணிக்கை!
By | Published On : 18th November 2021 05:24 PM | Last Updated : 18th November 2021 05:24 PM | அ+அ அ- |

கே.டி.ராகவன் விடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் நீக்கம்
யூடியூபில் இனி வரும் நாட்களில் டிஸ்லைக் செய்தவர்களின் எண்ணிக்கையைப் பொதுவெளியில் பார்க்க முடியாது என அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
யூடியூப் விடியோக்களில் விருப்பத்தைத் தெரிவிக்க ’லைக்’ பட்டன் இருப்பது போன்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் ‘டிஸ் லைக்’-களும் இருக்கிறது. இதனால் பார்வையாளர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை இந்த வசதிகளில் தெரிவித்து வந்தார்கள். இனி அது தொடராது என யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இருப்பினும் டிஸ்லைக் பட்டன் இப்போது இருக்கிற இடத்திலேயே தொடரும் எனவும் தங்களுடைய எதிர்ப்பை டிஸ்லைக்களில் தெரிவித்தாலும் அதன் எண்ணிக்கையை விடியோவைப் பதிவு செய்தவரால் மட்டுமே பார்க்க முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் ஒரு விடியோவை எத்தனை பேர் வெறுக்கிறார்கள் என்பதைப் பொதுப்பார்வையாளர்களால் இனி அறிய முடியாது .