பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 அறிமுகம்

பிக்சல் ஸ்மார்ட்போன்களில் முதலில் ஆண்ட்ராய்ட் 12 பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பான ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் முதலில் அறிமுகமாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால் பிக்சல் 3, 3ஏ , பிக்சல் 4, 4ஏ மற்றும் பிக்சல் 5, 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் 12 இறுதி வடிவத்தை விரைவில் அப்டேட் செய்து கொள்ளலாம் .

மேலும் இந்த வருட இறுதியில் சாம்சங் கேலக்ஸி , ஒன் பிளஸ் , ஓப்போ , ரியல்மீ , டெக்னோ , விவோ மற்றும் ஸியோமி ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்ட் 12 பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூகுள் தெரிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம் ‘மெட்டீரியல் யூ’ என வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com