5ஜி சோதனை: ஜியோவுடன் இணைந்த ஓப்போ

இணையப் பயன்பாட்டின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் 5ஜி இணையத்தை பரிசோதிக்க ஜியோவுடன் ஓப்போ நிறுவனம் இணைந்துள்ளது.
5ஜி சோதனை: ஜியோவுடன் இணைந்த ஓப்போ

இணையப் பயன்பாட்டின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் 5ஜி இணையத்தை பரிசோதிக்க ஜியோவுடன் ஓப்போ நிறுவனம் இணைந்துள்ளது.

ஓப்போவின் புதிய தயாரிப்பான ‘ஓப்போ ரெனோ’ வரிசை ஸ்மார்ட்போன்களில் உள்ள 5ஜி இணைய வசதியை பரிசோதிக்க ஜியோ 5ஜி நெட்வோர்க் உடன் ஓப்போ நிறுவனம் சோதனையை மேற்கொண்டது.

இச்சோதனையில் 5ஜி இணையத்தை தாங்கும் வகையில் உருவான ரெனோ 7 வரிசை ஸ்மார்ட்போனில் 4கே வரையிலான விடியோவை  தடையின்றி பார்க்கவும், மிக வேகமாக அப்லோட் மற்றும் டவுன்லோட்கள் நடைபெறுவதாக ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் 4ஜி இணையத்தை விடக்கூடுதலான வேகத்தில் இயங்கும் 5ஜி இணையம் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு 2023-இல் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஓப்போ ரெனோ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

’ஒப்போ ரெனோ 7' வரிசை சிறப்பம்சங்கள் :

* 6.4 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

* மீடியாடெக்  900

* உள்ளக நினைவகம் 8 ஜிபி + கூடுதல் நினைவகம் 256 ஜிபி

* கலர் ஓஎஸ்  11

* 4500 எம்ஏஎச் அளவுள்ள பேட்டரி   

விற்பனை விலை ரூ.28,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com