’சோனி பிளே ஸ்டேஷன் 5’ முன்பதிவு நாளை(மார்ச்-24) தொடக்கம்
By | Published On : 23rd March 2022 01:39 PM | Last Updated : 13th April 2022 06:04 PM | அ+அ அ- |

சோனி நிறுவனம் ’பிளே ஸ்டெஷன் 5’ முன்பதிவை இந்தியாவில் நாளை(மார்ச்-24) தொடங்கவுள்ளது.
சோனி நிறுவனம் தன்னுடைய பிரபல விடியோ கேமிங் சாதனமான ’பிளே ஸ்டேஷன் 5’ சாதனத்தை இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்தது. இருப்பினும் சிப் பற்றாக்குறை காரணமாக குறைந்த அளவிலான தயாரிப்புகளே வெளிவந்தது.
இந்நிலையில், அதிகரிக்கும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக மீண்டும் நாளை முதல் முன்பதிவை தொடங்க உள்ளதாக சோனி அறிவித்துள்ளது.
முன்பதிவு விலையாக ’பிளே ஸ்டேஷன் 5’ டிஜிட்டல் எடிசன் ரூ.39,990 ஆகவும் புளூ-ரே வெர்சன் ரூ.49,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட தளங்களிலும் முன்பதிவு செய்யலாம் என சோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.