ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

புதிய ஐபோன் எஸ்இ: விலை உயர்வு மற்றும் புதிய அம்சங்கள்
கோப்புப் படம்
கோப்புப் படம்

தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் ஆப்பிளின் பட்ஜெட் மாடலான ஐபோன் எஸ்இ புதிய மாடல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய ஐபோன் எஸ்இ மாடலின் அடுத்த தலைமுறை போன்களின் விலை- 10 சதவீதம் உயர்த்தப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்படலாம் என 9டு5மேக் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஐபோன் எஸ்இ நான்காம் தலைமுறை போன்கள் 469 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதன் அப்டேடட் வெர்சன் 500 அமெரிக்க டாலருக்கு வெளியாகலாம் எனவும் அல்லது விலை குறைக்கப்பட்டு 429 டாலருக்குக் கூட வரலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐபோன் 14 மாடலின் வெளிக்கூடு மாதிரியை கொண்டே 6.1 இன்ச் திரையளவில் புதிய ஐபோன் எஸ்இ மாடல் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது.

முந்தைய மாடல் 4.7 இன்ச் திரை கொண்டதாகவும் ஹோம் பட்டனில் டச் ஐடி கொண்டதாகவும் உள்ளது.

சமீபத்திய ஐபோன்களில் பயன்படுத்தப்படும் யுஎஸ்பி சி போர்ட் இதிலும் கொடுக்கப்படவுள்ளது. மியுட் பட்டனுக்கு பதிலாக ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உள்ளதுபோல ஆக்‌ஷன் பட்டன் கொடுக்கப்படலாம்.

2025-ல் புதிய மாடல் ஐபோன் எஸ்இ அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com