பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா?

பெற்றோரை மதிப்பதிலும், சொல் பேச்சைக் கேட்பதிலும் தலைமுறைக்கு தலைமுறை வேறுபடுகிறது. அதிலும் தற்போதைய தலைமுறை பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்வதைக் காது கொடுத்து கேட்கவே பிடிப்பதில்லை.
பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா?
பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா?

பெற்றோரை மதிப்பதிலும், சொல் பேச்சைக் கேட்பதிலும் தலைமுறைக்கு தலைமுறை வேறுபடுகிறது. அதிலும் தற்போதைய தலைமுறை பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்வதைக் காது கொடுத்து கேட்கவே பிடிப்பதில்லை.

முதலில் பெற்றோர் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்டால்தானே, அதைச் செய்வதா? வேண்டாமா? அவர்கள் சொல்வது யார் நல்லதுக்கு என்றெல்லாம் புரியும். பெற்றோர் பேச ஆரம்பித்ததுமே பல பிள்ளைகள் தங்கள் காதுகளுக்குப் பூட்டுப் போட்டு விடுகிறார்களே. வாய் அசைவை வைத்து என்னதான் புரிந்து கொள்ள முடியும் சொல்லுங்கள்?

சரி பிள்ளைகள் நமது பேச்சைக் கேட்காமல் போவதற்கு யார் காரணம்? அவர்களா? இல்லை பெற்றோரா? பெரும்பாலும் இதில் பெற்றோருக்குத்தான் பெரும்பங்கு.

முதலில் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்காமல் போவதற்குக் காரணம் என்னவென்று பார்க்கலாம்..

குழந்தைகள் பிறந்தது முதலே, அதற்கு என்ன புரியும் என்று கேட்க வேண்டாம்.. புரிகிறதோ இல்லையோ, குழந்தைகளிடம் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சின்ன சின்ன நகைச்சுவைகளைச் சொல்லி சிரிப்பது, உறங்கும் போது கதைகள் சொல்வது மிகவும் அவசியம். இதுதான் நாம் பேசுவதை அவர்கள் கேட்கும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்துகிறது. ஆரம்பத்திலேயே இதைச் செய்ய தவறிவிட்ட பெற்றோர், இனி தலைகீழாக நின்றாலும் நமது பிள்ளைகள் நமது பேச்சைக் கேட்பார்கள் என்று முயற்சிப்பது வீண் வேலை. அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வது சாலச் சிறந்தது.

அதெல்லாம் குழந்தையாக இருந்த போது கேட்டார்கள்.. இப்போதுதான் பிரச்னையே என்பவர்கள்.. கீழ்கண்டவற்றை நீங்கள் செய்கிறீர்களா என்று பாருங்கள்...
எப்போதும் பிள்ளைகளிடம் கோபமாகப் பேசுவது..
பிள்ளைகளின் குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டுவது..
பிள்ளைகள் எதைச் செய்தாலும் அப்படி செய்யாதே, இப்படி செய்யாதே என்று கடிந்து கொள்வது..
அவர்கள் ஏதேனும் பொழுதுபோக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களை அழைத்து அறிவுரை கூறுவது..
அவர்களாக உங்களிடம் பேச வரும்போது வேறு ஏதேனும் வேலையில் கவனம் செலுத்துவது..
நண்பர்கள் முன்னிலையில் திட்டுவது..
அவர்களது பேச்சை காது கொடுத்து கேட்காமல் விட்டுவிடுவது..
ஒரு அறிவுரையை சின்னதாகச் சொல்லாமல், நீட்டி முழக்கிக் கூறுவது..
ஒரு தவறு செய்துவிட்டால் அதையே நாள் முழுக்கச் சொல்லிக் காட்டுவது..
அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை செய்யவேக் கூடாது என்று வலியுறுத்துவது.. போன்றவை, இந்தத் தலைமுறை பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து வெகு தொலைவுக்குக் கொண்டு சென்றுவிடுகின்றன.

சரி என்னதான் செய்ய வேண்டும் அவர்கள் நமது பேச்சைக் கேட்க என்றால்..
அவர்கள் தவறு செய்தாலும் அப்போது அது குறித்து திட்டாமல் விடுவது அல்லது மன்னித்து விடுவதாகக் கூறுவது..
செல்லிடப்பேசியை எப்போதும் கையில் வைத்திருப்பது குறித்து அவர்களை கடிந்து கொள்ளாமல், அதைக் குறைக்க வேறு வழிகளை நீங்களே கண்டடைதல்.
அவர்களுக்கு ஓவியம் வரைதல், தோட்டம் அமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஆர்வமிருந்தால், அதற்குப் பழக்கப்படுத்தலாம்.
தற்போது வீட்டிலிருக்கும் பிள்ளைகள், சமையலில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதையும் செய்யப் பழக்கலாம்.
அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்து, அந்தப் பேச்சு சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கும் போது, அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களைச் சொல்லலாம். அப்போது அவர்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்க வாய்ப்பிருக்கிறது.
ஒரு அறிவுரை என்றால் அதை ஒரே வாக்கியத்தில் முடித்துவிடுங்கள். 
நீங்கள் அறிவுரை கூறும்போது சரி, செய்கிறேன் என்று அவர்கள் சொல்லிவிட்டால், அந்த அறிவுரையை அத்தோடு நிறுத்திவிடுங்கள். அதற்கு மேல் அதைத் தாங்க முடியாது என்பதே அந்த சரி, செய்கிறேன் என்பதன் அர்த்தம்.
ஒரு விஷயத்தை நீங்கள் சொல்ல வேண்டும் என்றால், அது குறித்து யூ-டியூப்பில் ஏதேனும் விடியோ வந்திருக்கிறதா என்று பாருங்கள். அதை அவர்களுக்கு அனுப்பி பார்க்க வைக்கலாம். (அடிக்கடி தண்ணி குடிக்க வேண்டும் என்பது முதல்)
எதையும் நாம் சொல்வதை விட, இப்படி தெரிந்து கொண்டு பின்பற்றுவதற்கு பிள்ளைகள் விரும்புகிறார்கள். (வேறு வழியில்லை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com