செல்லப் பிராணியுடன் சுற்றுலா.. கவனிக்க வேண்டியவை

செல்லப் பிராணிகள்... எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நம் மீது அன்பைப் பொழியும் என்பதை மறுக்கவே முடியாது. அளவில்லா அன்பு, பாசம் அனைத்தையும் காட்டும், மனக் கவலையை போக்கும் அறுமருந்தாக இருக்கும். 
செல்லப் பிராணியுடன் சுற்றுலா.. கவனிக்க வேண்டியவை
செல்லப் பிராணியுடன் சுற்றுலா.. கவனிக்க வேண்டியவை


செல்லப் பிராணிகள்... எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நம் மீது அன்பைப் பொழியும் என்பதை மறுக்கவே முடியாது. அளவில்லா அன்பு, பாசம் அனைத்தையும் காட்டும், மனக் கவலையை போக்கும் அறுமருந்தாக இருக்கும். 

அதன் பொறுப்புணர்ச்சிக்கு எல்லையே இருக்காது. செல்லப் பிராணிகளும் நமது வாழ்முறையில் ஒரு அங்கமாகவே மாறிவிடுவதும் உண்டு. நம் குடும்பத்தில் ஒருவரை விட்டுவிட்டு நாம் சுற்றுலா செல்ல முடியுமா? பிறகு செல்லப் பிராணிகளை மட்டும் எப்படி விட்டுவிடுவது?

எனவே, செல்லப் பிராணியுடன் சுற்றுலா செல்வது என்றால், அதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன. அது நினைக்கும் போது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும், நிச்சயம் ஒரு சிறந்த அனுபவமாக அமையும். நல்ல மகிழ்ச்சியான நாள்களை உருவாக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

என்னென்ன செய்ய வேண்டும்?
உங்கள் செல்லப் பிராணியின் மருத்துவரிடம் சுற்றுலா செல்வது குறித்து கலந்தாலோசனை செய்யுங்கள். சுற்றுலா செல்ல உங்கள் செல்லப் பிராணி தகுதியுடன் இருக்கிறதா என்பதை அவர்களே முதலில் முடிவு செய்துவிடுவார்கள்.

சுற்றுலாவுக்குத் தயார்படுத்துங்கள்.. படிகளில் ஏறுவதற்கு, வாகனத்தில் அமர்ந்து செல்வதற்கு உங்கள் செல்லப் பிராணியை தயார்படுத்துங்கள்.

மேலும், உங்கள் செல்லப் பிராணியை சுமந்து செல்லத் தேவையான வழிமுறைகளைத் தேடுங்கள்.

சுற்றுலா கிளம்புவதற்கு முன்பு, அதற்கு அதிகமான உணவு எதுவும் கொடுக்க வேண்டாம். வழியில் அது காலைக்கடன்களை முடிக்க வசதி செய்து கொடுங்கள்.

அதற்குரிய உணவுகளை நிச்சயம் கையில் எடுத்துச் செல்லுங்கள். 

உங்கள் சுற்றுலா உண்மையிலேயே குதூகலத்துடன் இருக்கும். வாழ்வில் என்றும் பசுமையாக.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com