கர்நாடக இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கர்நாடக பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கர்நாடக இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்


பெங்களூரு: கர்நாடக பேரவையின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
 

கஜேவாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி

கஜேவாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்ரீமந்த் பட்டீல் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட 18,251 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதை அடுத்து, பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்தார் எடியூரப்பா

கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க 6 இடங்கள் தேவை என்ற நிலையில் 6 இடங்களில் வெற்றி பெற்று அதை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளார் எடியூரப்பா.

 கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்தார் எடியூரப்பா.

ஹன்சுர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

 இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களை பாஜக கைப்பற்றினால் பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளலாம்.

எல்லாப்பபூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஷிவ்ராம் ஹெப்பர்

 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நண்பகல் 12 மணிக்குள் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றன.

எல்லாப்பபூர் தொகுதியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாஜக

கர்நாடக மாநிலத்தின் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் எல்லாப்பூர் தொகுதியில் பாஜக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட 31,406 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சிவராம் ஹெப்பர் வெற்றிபெற்றுள்ளார்.

கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி

கர்நாடகாவில் 15 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம் காட்டியுள்ளது. 15 தொகுதிகளில் 11 தொகுதிகளை வென்றதன் மூலம், கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக அரசு பெற்றுள்ளது.
15 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை வென்றாக வேண்டும் என்ற நிலையில் அதை விட அதிகமாக 11 தொகுதிகளில் வென்றதோடு மட்டுமல்லாமல், மேலும் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

கர்நாடகம்: ஆறு தொகுதிகளில் வெற்றி; 6 தொகுதிகளில் முன்னிலை

கர்நாடக மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 6 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிக வாக்குகளை அளித்து பாஜகவை வாழ்த்திய கர்நாடக மக்கள்: எடியூரப்பா

இன்றைய தினத்தில் அதிக மகிழ்ச்சியான நபர் யார் என்று கேட்டால் அது கர்நாடக முதல்வர் எடியூரப்பா தான். கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மக்கள், பாஜக வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகளை அளித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில் நான் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுக்கிறேன், அதாவது மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். இனி மாநிலத்தின் மேம்பாட்டில்தான் முழு கவனம் செலுத்தப்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com