அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

கரோனா பற்றி உலகம் முதல் உள்ளூர் செய்திகள் வரை  - லைவ் அப்டேட்ஸ்

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் உதவிப் பொருள்கள் விற்பனை!

பாகிஸ்தானில் கரோனா கால நிவாரணப் பொருள்களை சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அதிகாரிகளே  விற்றிருக்கின்றனர்.

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கான இந்தப் பொருள்கள் வெளிச்சந்தையில் விற்கப்பட்டது பற்றி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.

சேலத்தில் வார இறுதி நாள்களில் இறைச்சி விற்கத் தடை

சேலம் மாநகர எல்லைக்குள் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளை நடத்த தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார். விரிவான செய்திக்கு..

ஏப். 14-க்குப் பிறகான முன்பதிவு எப்போதும் நிறுத்தப்படவில்லை: ரயில்வே

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகான நாள்களுக்கான ரயில் பயண முன்பதிவு எப்போதும்  நிறுத்திவைக்கப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு முடிந்த ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகான ரயில்வே முன்பதிவுகள் தொடங்கியதாக வெளியான செய்திகள் பற்றி விளக்கமளித்துள்ள அமைச்சகம், இதுதொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முன்பதிவு நிறுத்திவைக்கப்படவுமில்லை என்று தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் ஒருவர் பலி

ராஜஸ்தானில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

85 வயதான இவர் ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக மாநில நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை ஒரே நாளில் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இத்தாலியில் 727 பேரும், ஸ்பெயினில் 667 பேரும் மற்றும் பிரான்ஸில் 509 பேர் உயிரிழந்துள்ளனர்.  விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் 198 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்று, இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கருணையில்லா கரோனாவுக்கு, பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை பலி

அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை ஒன்று கருணையில்லா கரோனா நோய்த்தொற்றுக்கு பலியான சம்பவம் அமெரிக்கா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு...

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது

 உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை ஒரே நாளில் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இத்தாலியில் 727 பேரும், ஸ்பெயினில் 667 பேரும் மற்றும் பிரான்ஸில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு...

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் 198 நாடுகளுக்கு மேல் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்று, இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

மத்தியப் பிரதேசத்தில் 107 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் உயிரிழந்தனர் என நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி!

 கர்நாடகத்தில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இவர்களுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. இவர்களில் மூவர் இறந்துவிட்டனர். 11 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 107  பேரின் உடல்நிலை சீராக இருக்கிறது.  3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர்.

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு

 இந்தியாவில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50லிருந்து 53ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவால் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2069 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பிலிருந்து 155 பேர் குணமடைந்துள்ளனர். 

 

உலகளவில் கரோனா பலி 50ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இத்தாலி 13,915, ஸ்பெயின் 10,0003, அமெரிக்கா 5,334, பிரான்ஸில் 4,032 பேர் பலியாகியுள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 9,80,519ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து 2,06,264க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 

 

ஆரோக்யசேது செயலி: மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய ஆப்

 கோவிட்- 19 எனப்படும் கரோனா நோய்க்கு எதிரான உறுதியான போராட்டத்தில், இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்காக, அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் செல்லிடப்பேசி செயலி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.விரிவான செய்திக்கு...

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா: மத்திய நல்வாழ்வுத் துறை

 புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

ஃபீனிக்ஸ் மாலுக்கு வந்தவர்கள் தகவல் தர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

 சென்னை: வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் அமைந்திருக்கும் கடையில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு...

 

ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி: கேஜரிவால்

 புது தில்லி: கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் ஆட்டோ, டேக்ஸி, இ-ரிக்‍ஷா ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு..

நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் தகவல்களை பகிர உள்ளார் பிரதமர் மோடி

புது தில்லி: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடியோ மூலம் பிரதமர் மோடி தகவல்களைப் பகிர உள்ளார்.விரிவான செய்திக்கு...

சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டம்

டாக்கா: மிக அதிக நெருக்கடி நிறைந்த சிறைச்சாலைகளில் கரோனா பரவினால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் வகையில் சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.வரிவான செய்திக்கு...

சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டம்

டாக்கா: மிக அதிக நெருக்கடி நிறைந்த சிறைச்சாலைகளில் கரோனா பரவினால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் வகையில் சுமார் 3,000 கைதிகளை விடுதலை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.வரிவான செய்திக்கு...

கரோனா தொற்றால் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல்

மும்பை: கரோனா தொற்றால் உலக நாடுகள் கலங்கி நிற்கும் நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு புதுவிதமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா; பாதிப்பு 309 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேர் பலி

ஈரானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,468 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் பலி எண்ணிக்கை 3,160 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஸ்பெயினில் பலி 10 ஆயிரத்தைக் கடந்தது; ஒரே நாளில் 950 பேர் இறப்பு

ஸ்பெயினில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 9,053 ஆக இருந்த நிலையில் ஒரே நாளில் 950 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா எதிரொலி: ஏர் இந்தியாவில் 200 விமானிகள் வேலை இழப்பு

ஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் தில்லி சென்றுவந்த 391 பேர் தனித்துவைக்கப்பட்டுள்ளனர்!

கர்நாடகத்தில் தில்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய 391 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக்  கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பிதார் பகுதியில் பரிசோதனை செய்யப்பட்ட 91 பேரில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா: பிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி!

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் பிரிட்டனில் ஒரே நாளில் மிக அதிக அளவாக 563 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,789-லிருந்து 2,352 ஆக அதிகரித்துள்ளது... விரிவான செய்திக்கு...

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு கரோனா!

தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு கரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர் கண்காணிப்புக்காகவும் சிகிச்சைக்காகவும் தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளத்தின் மது விற்பனைத் திட்டத்துக்குத் தடை!

குடியை நிறுத்தியதால் பாதிக்கப்படும் குடிகாரர்களுக்கு மது விற்கும் திட்டத்துக்குக் கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரளத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக குடிக்க  முடியாததால் சிலர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து மது விற்க கேரள அரசு முடிவு செய்தது.

எனினும், இந்தத் திட்டத்துக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

பிகாரிலிருந்து தில்லி சென்ற 81 பேர்!

பிகாரிலிருந்து தில்லி ஜமாத் மாநாட்டுக்கு 81 பேர் சென்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 30 பேரைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் மற்றவர்களைத் தேடும் பணியில் இருப்பதாகவும் பிகார் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மிகமிக மோசமான இரு வாரங்களைச் சந்திக்கப் போகிறோம்: டிரம்ப்

மிக மிக மோசமான இரு வாரங்களைச் சந்திக்கப் போகிறோம்  என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்...  விரிவான செய்திக்கு...

மதுரை மேலூரில் மருந்தகம் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவு

மதுரை மேலூரில் மருந்தகம் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூட நகராட்சி நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டினை கனிமொழி பார்வையிட்டார்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு கரோனா வைரஸ் வார்டினை  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வநத நபர் இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு..

கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கரோனா பரவாது: தமிழக கால்நடை பராமரிப்புத் துறை

கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதால் கரோனா பரவாது என்று தமிழக கால்நடை பராமரிப்புத் துறை தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனிதகுலம் பேராபத்தை சந்திக்கும்: மருத்துவா்கள் எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனித குலம் பேராபத்தைச் சந்திக்கும் என்று மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். விரிவான செய்திக்கு..

காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள் ஜூன் 30 வரை செல்லுபடியாகும்

காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள், வாகன அனுமதிச் சீட்டுகள், வாகனப் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்தது. விரிவான செய்திக்கு.. 

சுகாதாரத் துறையில் ஓய்வு பெற்றோருக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு

சுகாதாரத் துறையில் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்ற மருத்துவா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு 2 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா உறுதி: பினராயி விஜயன்

கேரளத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா: தலைமை நீதிபதி உள்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.50,000 நிதி

கரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக, தலைமை நீதிபதி உள்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தலா ரூ.50,000 நிதி வழங்குவதாக அறிவித்துள்ளனர். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா உறுதி: எண்ணிக்கை 234 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனாவுக்குக் கைமுறை வைத்திய மருந்து - 1914 ஆம் ஆண்டு தமிழ் நூலில்!

தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

24 மணி நேரத்தில் 864 பேர் பலி: ஸ்பெயினில் தொடரும் துயரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் 24 மணி நேரத்தில் 864 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை தெரிவித்தது.விரிவான செய்திக்கு..

கரோனா பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள தமிழக அரசின் சிறப்பு இணையதளம்

தமிழகத்தில் கரோனா பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சிறப்பு இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கால் மாட்டிக் கொண்ட மகன்; தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த மகள் By DIN | Published on : 01st April 2020 01:37 PM

ஹூபலி: ஊரடங்கு உத்தரவால் எத்தனையோ திருமணங்களும், இறுதிச் சடங்குகளும் முக்கிய உறவுகள் இல்லாமலேயே நடந்து முடிந்துவிட்டன. கர்நாடக மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவால் மகன் சொந்த ஊருக்கு வர முடியாமல் மாட்டிக் கொள்ள, மகளே தந்தைக்கு இறுதிச் சடங்கு நடத்தி முடித்திருக்கிறார்.விரிவான செய்திக்கு...

சென்னையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அதனை 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.விரிவான செய்திக்கு...

கரோனா பாதித்த 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளனர்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புது தில்லி: கரோனா பாதித்த 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு...

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். விரிவான செய்திக்கு..

கரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வர் பேசும் விழிப்புணர்வு ஆடியோ வெளியீடு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் விழிப்புணர்வு ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மேற்கு வங்கத்தில் கரோனாவுக்கு இருவர் மரணம்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

மேற்கு வங்கத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு..

குஜராத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம், அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 

குஜராத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம், அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திரத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதன் மூலம் அந்த மாநிலத்தில் மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரத்தில் மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்குள் 43 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 87 ஆக உயர்ந்துவிட்டதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,637 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com